ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் 2024, செப்டம்பர் 17 அன்று 8-வது இந்திய நீர் வாரத்தை இந்தியக் குடியரசுத்தலைவர் தொடங்கி வைக்கிறார்

Posted On: 16 SEP 2024 4:05PM by PIB Chennai

இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 8-வது இந்திய நீர் வாரம் 2024-ஐ 2024 செப்டம்பர் 17 அன்று புதுதில்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டில் மற்றும் இணை அமைச்சர் திரு ராஜ் பூஷண் சவுத்ரி ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கிறார். இந்த சர்வதேச நிகழ்வு நீர்வள அமைச்சகத்தால் 2024 செப்டம்பர் 17 முதல் 20 வரை புதுதில்லியின் பாரத் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நீர்வளத் துறை நிபுண வல்லுநர்கள் உள்ளிட்ட புகழ்பெற்ற பிரதிநிதிகள், மத்திய, மாநில அரசுகளின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த கற்றறிந்த ஆசிரியர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத் துறைச் செயலாளர் திருமதி தேபாஸ்ரீ முகர்ஜி, 8-வது இந்திய நீர் வாரம், 2024-ன் கருப்பொருள் 'கிய நீர் மேம்பாடு மற்றும் மேலாண்மை உள்ளடக்கத்திற்கான கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பு' என்று தெரிவித்தார். நிலையான நீர் மேலாண்மையை அடைவதற்கு அனைத்து துறைகள் மற்றும் நிலைகளில் ஒத்துழைப்பு தேவை - என்று அவர் மேலும் கூறினார்.

இந்திய நீர் வாரம் என்பது மத்திய அரசின் நீர்வள சக்தி அமைச்சகத்தால் ஒரு புதுமையான கருத்தாக உருவாக்கப்பட்டது என்றும், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பிற இணையான அமர்வுகள் மூலம் பிரபலமான பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது,

8-வது இந்திய நீர் வாரம் 2024, அமர்வுகளைத் தவிர, ஒரு கலாச்சார நிகழ்ச்சி மற்றும் கல்வி சுற்றுப்பயணத்தை உள்ளடக்கியது, இது அறிவு பரிமாற்றம் மற்றும் புதுமைகளைக் காண்பிப்பதற்கான ஏராளமான வாய்ப்புகளை வழங்கும்.

நிகழ்வின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

தொடக்க அமர்வு மற்றும் அமைச்சர்கள் முழுமையானகூட்டம், இதில் அரசுத் தலைவர்கள் நீர்த் துறை குறித்த தங்கள் பார்வை மற்றும் முன்னோக்குகளைப் பகிர்ந்து கொள்வார்கள்;

நீர்த் துறையில் உள்ள உலகளாவிய நிபுணர்கள் நீர்த் துறை குறித்த தங்களது நுண்ணறிவு மற்றும் சிந்தனையைத் தூண்டும் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் உலகளாவிய நீர் சார்ந்த துறை தலைவர்களின் முழுமையான கூட்டம்;

பொது, தனியார் மற்றும் அரசு சாரா துறைகளைச் நிபுணர்கள் பங்கேற்கும் அனைத்து முக்கிய கருப்பொருள் துறைகளையும் உள்ளடக்கிய நீர் தலைவர்கள் மன்றம்;

டென்மார்க், இஸ்ரேல், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுடனான மன்றக் கூட்டம்

*****

IR/KPG/KR/DL


(Release ID: 2055401) Visitor Counter : 63