குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஓணம் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 14 SEP 2024 6:38PM by PIB Chennai

ஓணம் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

"ஓணம் பண்டிகையை முன்னிட்டு, குடிமக்கள் அனைவருக்கும், குறிப்பாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் கேரளாவின் சகோதர சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பயிர்களை அறுவடை செய்வதைக் குறிக்கும் வகையில் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் வெளிப்பாடாக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரளாவின் வளமான கலாச்சாரப்  பாரம்பரியத்தை கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இது உள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில், நமது தேசத்திற்கு உணவளிக்க அயராது உழைக்கும் விவசாயிகளுக்கும் நமது  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வளமான திருவிழா சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் நம்மை ஊக்குவிக்கிறது.

நாட்டின் அமைதியும் ஒற்றுமையும் தொடர்ந்து வலுப்பெறட்டும், இந்தியாவை வளர்ந்த தேசமாக மாற்ற நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்" ..

*****

PKV/ KV


(रिलीज़ आईडी: 2055045) आगंतुक पटल : 126
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Telugu , Kannada , Malayalam