மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பல்வேறு முக்கிய திட்டங்களின் செயல்பாடு மற்றும் நிதி முன்னேற்றம் குறித்து, கிழக்கு மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அதிகாரிகளுடன் மத்திய அரசின் செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா ஆய்வு

Posted On: 13 SEP 2024 12:03PM by PIB Chennai

மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற  மண்டல ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கிழக்கு மாநிலங்களின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறைகளின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் திட்ட அமலாக்க அதிகாரிகள் கலந்து கொண்டு, பல்வேறு துறை திட்டங்கள் மற்றும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விவாதித்தனர்.

கூடுதல் செயலாளர் வர்ஷா ஜோஷி, இணைச் செயலாளர் சரிதா சவுகான், ஆலோசகர் (புள்ளியியல்) திரு ஜகத் ஹசாரிகா மற்றும் மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தேசிய கால்நடைப் பாதுகாப்பு இயக்கம் (ஆர்ஜிஎம்), தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் தொழில் முனைவோர் மேம்பாடு, தேசிய விலங்கின நோய் கட்டுப்பாட்டுத் திட்டம் (என்ஏடிசிபி) மற்றும் தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம் (என்பிடிடி) உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களின் கட்டமைப்பு மற்றும் நிதி முன்னேற்றம் குறித்து திருமதி அல்கா உபாத்யாயா ஆய்வு செய்தார்.

 

மாநிலங்களில் நிலவும் தீவன பற்றாக்குறை மற்றும் பருவநிலை மாறுபாடுகளை கருத்தில் கொண்டு, உற்பத்தி செய்யும் மாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தீவன பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் உள்ளூர் உத்திகளை அடையாளம் காணுமாறு திருமதி அல்கா உபாத்யாயா அதிகாரிகளை வலியுறுத்தினார். பால் சேகரிப்பு, குளிரூட்டுதல், பதப்படுத்துதல் மற்றும் சோதனை ஆகியவற்றிற்காக என்.பி.டி.டி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பை உகந்த முறையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஒழுங்கமைக்கப்பட்ட பால்பண்ணைத் துறையின் பரப்பளவை அதிகரித்தல், உள்நாட்டு பால் உற்பத்திகளை ஊக்குவித்தல், பெறுமதிப்புக் கூட்டலை மேம்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்தல் செயல் திட்டங்களை உருவாக்குதல் ஆகியவை, பிராந்தியத்தில் பால்பண்ணை விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதற்கான நீடித்த அணுகுமுறைகளாக எடுத்துக்காட்டப்பட்டன.

தேசிய கால்நடை இயக்கத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டங்களின் கீழ், இனப்பெருக்க பண்ணைகளை நிறுவுவதில் மாநிலங்களின் முயற்சிகளையும் கூட்டம் அங்கீகரித்தது. இந்தத் திட்டங்களின் கீழ் கிடைக்கும் வாய்ப்புகள் மற்றும் நிதி உதவிகளை மாநிலங்கள் அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, திருமதி உபாத்யாயா மாநிலங்களை ஊக்குவித்தார்.

மறுசீரமைக்கப்பட்ட கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (.எச்..டி.எஃப்) திட்டத்தை பயனாளிகளிடையே தீவிரமாக ஊக்குவிக்கவும், அதன் நன்மைகளை அதிகரிக்கவும், தொழில்முனைவோரை வளர்க்குமாறும், மாநிலங்களை அவர் வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தில், மாநிலங்கள் தங்களது புதிய முயற்சிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை முன்வைத்தன.

கூட்டத்தின் முடிவில் பேசிய திருமதி அல்கா உபாத்யாயா, 21-வது கால்நடை கணக்கெடுப்பின் வெற்றியை உறுதி செய்வதில், சம்பந்தப்பட்ட அனைவரின் கூட்டுப் பொறுப்பை வலியுறுத்தினார். வரவிருக்கும் 21-வது கால்நடை  கணக்கெடுப்பு கால்நடை பராமரிப்புத் துறைக்கான எதிர்கால கொள்கைகள் மற்றும் திட்டங்களை வடிவமைப்பதில், முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை எடுத்துரைத்த அவர், அதை வெற்றிகரமாக செயல்படுத்த சமீபத்திய தொழில்நுட்பங்களை மேம்படுத்த அழைப்பு விடுத்தார்.

கால் மற்றும் வாய் நோய் (எஃப்எம்டி) மற்றும் புருசெல்லோசிஸ் போன்ற முக்கிய நோய்களுக்கு எதிரான தடுப்பூசியில் முதன்மை கவனம் செலுத்தும் மத்திய அரசின் என்ஏடிசிபி திட்டம், கால்நடைகள், எருமைகள், செம்மறி ஆடுகள் மற்றும் ஆடுகளுக்கான ஆறு மாத தடுப்பூசிகளின் நிலை குறித்து விவாதங்களுடன் மதிப்பாய்வு செய்யப்பட்டது. கால்நடை நோய்களைக் கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு உதவுதல் (அஸ்காட்), நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகளை (எம்.வி.யு) செயல்படுத்துதல் மற்றும் பசுகல்யாண் சமிதிகள் உருவாக்கம் ஆகியவை மற்ற தலைப்புகளில் அடங்கும்.

----

(Release ID 2054425)

MM/KPG/KR


(Release ID: 2054486) Visitor Counter : 36