சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகளாவிய தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதில் புத்த மதத்தின் பங்கு குறித்த மாநாடு மும்பையில் நாளை நடைபெறுகிறது: மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ பங்கேற்கிறார்

प्रविष्टि तिथि: 13 SEP 2024 10:24AM by PIB Chennai

மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகமும், சர்வதேச பௌத்த கூட்டமைப்பும் இணைந்து மும்பை வோர்லியில் உள்ள நேரு அறிவியல் மையத்தில் 2024 செப்டம்பர் 14 அன்று  "எதிர்கால உலகளாவிய தலைமைக்கு வழிகாட்ட புத்தரின் மத்யம மார்க்கம்" என்ற தலைப்பில் ஒரு நாள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

தேசிய வேறுபாடுகளைக் கடந்து தம்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு உலகளாவிய மதிப்புகளைப் பரப்புவதற்கும் உள்வாங்குவதற்கும் இந்த நிகழ்வு திட்டமிட்ட வழிகளை நோக்கமாகக் கொண்டுள்ளது. எதிர்காலத்திற்கான நிலையான மாதிரியை வழங்குவதற்காக தனிநபருக்குள்ளும் உலகளாவிய ரீதியிலும் தற்போதைய சவால்களை எதிர்கொண்டு ஒன்றிணைந்து பணியாற்றுதல் போன்றவற்றில் இந்த மாநாடு கவனம் செலுத்தும். நவீன புத்த மதத்திற்கு இன்றியமையாத பங்களிப்பை வழங்கிய பாபாசாஹேப் பீம்ராவ் அம்பேத்கரின் மரபை இந்த மாநாடு கௌரவிக்கும்.

இந்த மாநாடு "நவீன காலங்களில் புத்த தம்மத்தின் பங்கு", "கவனத்துடன் கூடிய நுட்பங்களின் முக்கியத்துவம்", "புத்த தம்மத்தை செயல்படுத்துதல்" ஆகிய மூன்று அமர்வுகளை உள்ளடக்கியதாக இருக்கும். புத்தரின் போதனைகள், தம்மத்தின் கொள்கைகளில் உலகளாவிய சகோதரத்துவம், நிலைத்தன்மை, ஒட்டுமொத்த தனிப்பட்ட நல்வாழ்வு ஆகியவற்றின் குறிக்கோளுக்கான நடைமுறை தீர்வுகள் குறித்து இந்த மாநாடு விவாதிக்கும்.

***

(Release ID: 2054379)

PLM/RS/KR


(रिलीज़ आईडी: 2054398) आगंतुक पटल : 114
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , हिन्दी , English , Urdu , Punjabi , Gujarati