சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
குடியரசுத் தலைவர் மாளிகையில் 15 பேருக்கு தேசிய ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் 2024-ஐ குடியரசுத் தலைவர் வழங்கினார்
Posted On:
11 SEP 2024 2:53PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் செவிலியர்களுக்கு 2024-ம் ஆண்டுக்கான தேசிய ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார். மொத்தம், 15 செவிலியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி. அனுப்பிரியா படேல் மற்றும் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விருது பெற்றவர்களைப் பாராட்டிய திரு. ஜே. பி. நட்டா, இந்தப் பாராட்டு பொதுச் சேவையில் தொடர்ந்து ஈடுபட அவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று கூறினார். "செவிலியர்கள் சுகாதாரத் துறையின் முதுகெலும்பு" என்றும் அவர் கூறினார்.
செவிலியர்கள் சமுதாயத்திற்கு ஆற்றும் பாராட்டத்தக்க சேவையை அங்கீகரிக்கும் அடையாளமாக மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் 1973-ம் ஆண்டு தேசிய ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது ஏற்படுத்தப்பட்டது.
பதிவுசெய்யப்பட்ட துணை செவிலியர்கள் & மருத்துவச்சி ஆகியோருக்கு மொத்தம் 15 விருதுகள் வழங்கப்படுகின்றன. மத்திய, மாநில / யூனியன் பிரதேசங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளில் பணிபுரியும் சிறந்த செவிலியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. மருத்துவமனை அல்லது சமூக அமைப்புகள், கல்வி அல்லது நிர்வாக அமைப்பில் வழக்கமான பணியில் உள்ள செவிலியர் தேசிய விருதுக்கு தகுதியுடையவர். ஒவ்வொரு விருதும் தகுதிச் சான்றிதழ், ரூ.1,00,000/- ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம் கொண்டதாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053693
***
IR/RR/KR
(Release ID: 2053736)
Visitor Counter : 64