சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிக்கு மேற்கு ஆப்பிரிக்க கிளேட் 2-ன் குரங்கு அம்மை நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது
प्रविष्टि तिथि:
09 SEP 2024 6:13PM by PIB Chennai
குரங்கு அம்மை நோய் தொடர்பாக முன்னர் சந்தேகிக்கப்பட்ட நபர், மேற்கொண்ட பயணத்தால் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க கிளேட் 2-ன் குரங்கு அம்மை நோய் இருப்பதை ஆய்வக சோதனை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக, 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்தியாவில் பதிவான 30 பேருக்கான பாதிப்பைப் போன்று தற்போதைய ஒருவரும் தனிமைப்படுத்தப்படக் கூடிய நோயாளியாவார். இது தற்போதைய பொது சுகாதார அவசரநிலையின் ஒரு பகுதியாக உள்ள குரங்கு அம்மை நோயின் கிளேட் 1 தொடர்பானது இல்லை.
பாதிக்கப்பட்டுள்ள ஆண், அண்மையில் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நாட்டுக்குப் பயணம் செய்துள்ளார். தற்போது அவர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மருத்துவ ரீதியாக அவர் நலமுடன் இருக்கிறார். எந்தவொரு இணை நோயாலும் அவர் பாதிக்கப்படவில்லை. சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், தொடர்பை அறிதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது இந்நோய் பெருமளவு பரவி ஆபத்தை விளைவிப்பதற்கான சூழல் ஏதுமில்லை.
---
IR/KPG/DL
(रिलीज़ आईडी: 2053235)
आगंतुक पटल : 180