நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2வது இந்தியா-ஜப்பான் நிதி பேச்சுவார்த்தை டோக்கியோவில் செப்டம்பர் 6-ந் தேதி நடைபெற்றது

Posted On: 09 SEP 2024 1:50PM by PIB Chennai

ஜப்பானின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை நிதி அமைச்சர் திரு. அட்சுஷி மிமுரா, இந்தியாவின் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் திரு. அஜய் சேத் ஆகியோர் டோக்கியோவில் கடந்த 6-ந் தேதி 2 வது இந்தியா-ஜப்பான் நிதி உரையாடலை நடத்தினர்.

 

ஜப்பான் தூதுக்குழுவில் நிதி அமைச்சகம் மற்றும் நிதிச் சேவைகள் முகமையின் பிரதிநிதிகளும் இடம் பெற்றனர். இந்திய தரப்பில், நிதி அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், சர்வதேச நிதி சேவை மைய ஆணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

 

பங்கேற்பாளர்கள் இரு நாடுகளின் பொருளாதார நிலைமை குறித்து தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மூன்றாம் நாடுகளின் ஒத்துழைப்பு, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை, நிதி டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் இரு நாடுகளிலும் உள்ள பிற கொள்கை முயற்சிகள் உள்ளிட்ட நிதித் துறை பிரச்சனைகள் குறித்தும் பங்கேற்பாளர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்தியாவில் முதலீட்டை மேலும் விரிவுபடுத்துவதற்கான பல்வேறு நிதி ஒழுங்குமுறை பிரச்சனைகள் குறித்து விவாதிக்க ஜப்பானின் நிதிச் சேவைத் தொழில்துறையின் பிரதிநிதிகள் ஒரு அமர்வில் பங்கேற்றனர்.

 

நிதி ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பேச்சுவார்த்தைகளைத் தொடர இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர், மேலும் அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை புதுடில்லியில் நடத்துவது குறித்து ஆராயவும் ஒப்புக்கொண்டனர்.

***

(Release ID: 2053080)

PKV/RR/KR


(Release ID: 2053087) Visitor Counter : 45