திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சரக்கு போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன: திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி

Posted On: 07 SEP 2024 4:15PM by PIB Chennai

2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் (எம்.எஸ்.டி.இ) ஸ்விக்கி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, 'ஸ்விக்கி ஸ்கில்ஸ்' முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது.

 

இது ஸ்விக்கி-யின் உணவு விநியோகம், விரைவான வர்த்தக கட்டமைப்பில் பலவிதமான திறன் சார்ந்த வேலை வாய்ப்புகளை வழங்கும். இந்த முயற்சி உணவக செயல்பாடுகள், சில்லறை வணிக நிர்வாகத்தின் பல்வேறு அம்சங்களில் மக்களுக்கு வேலைவாய்ப்பு, பயிற்சி வாய்ப்புகளை வழங்கும். ஸ்விக்கி ஸ்கில்ஸ் முன்முயற்சியின் கீழ், ஸ்விக்கி பார்ட்னர் தளம் ஸ்கில் இந்தியா டிஜிட்டல் ஹப் (எஸ்ஐடிஎச்) உடன் ஒருங்கிணைக்கப்படும். இது ஸ்விக்கியின் பணியாளர்களுக்கு இணையதள திறன் மேம்பாட்டு படிப்புகள், சான்றிதழ்கள், பயிற்சி தொகுப்புகளுக்கான அணுகலை வழங்குகிறது. இந்த கூட்டாண்மை ஸ்விக்கியுடன் தொடர்புடைய 2.4 லட்சம் விநியோகம் செய்பவர்கள் மற்றும் உணவக நிறுவனத்தினருக்கு பயனளிக்கும்.

 

இந்த முயற்சி தொடர்பான நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசிய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி, 2047 வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய, சரக்குப் போக்குவரத்துத் துறை முக்கிய பங்கு வகிக்கும் என்றார். இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்தியாவில் தேசிய சரக்கு போக்குவரத்து கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது என அவர் கூறினார். திறன் வளர்ப்பும், கல்வியும் கைகோர்த்து செயல்படும் இந்தத் துறையின் வளர்ச்சிக்கான சூழலை அரசு உருவாக்கி வருகிறது என அவர் குறிப்பிட்டார். இன்றைய இந்த நிகழ்ச்சி பொது - தனியார் ஒத்துழைப்பை எவ்வாறு துரிதப்படுத்த முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது என அவர் தெரிவித்தார். இந்தத் துறையில் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன என அமைச்சர் தெரிவித்தார்.

 

திறன் மேம்பாடு - தொழில்முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் திரு அதுல் குமார் திவாரி பேசுகையில், இந்த ஒத்துழைப்பு இரண்டு நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். இது சில்லறை மற்றும் விநியோக சங்கிலி சரக்குப் போக்குவரத்துத் துறையின் பொருளாதார பங்களிப்பை அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார். 

 

ஸ்விக்கி ஒரு முன்னணி உள்நாட்டு நுகர்வோர் நிறுவனம் ஆகும். இது கிட்டத்தட்ட 700 நகரங்களில் செயல்படுகிறது. ஸ்விக்கி ஃபுட் உடன் உணவு விநியோகத்தில் முன்னோடியாக பரந்த கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

 

இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஸ்விக்கி ஃபுட் மார்க்கெட் பிளேஸின் தலைமைச் செயல் அதிகாரி திரு ரோஹித் கபூர், இது கிட்டத்தட்ட 2.4 லட்சம் விநியோக பங்குதாரர்கள், 2 லட்சம் நிறுவனத்தினரின் ஊழியர்களுக்கு பயன் அளிக்கும் என்றார்.

 

*****


PLM/DL


(Release ID: 2052822) Visitor Counter : 52