உள்துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா முன்னிலையில் மத்திய அரசு, திரிபுரா அரசு, என்.எல்.எஃப்.டி மற்றும் ஏ.டி.டி.எஃப் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
Posted On:
04 SEP 2024 7:22PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா முன்னிலையில் மத்திய அரசு, திரிபுரா அரசு, திரிபுரா தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எஃப்.டி) மற்றும் அனைத்து திரிபுரா புலிகள் படை (ஏ.டி.டி.எஃப்) இடையே புதுதில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமைதியான, வளமான, கிளர்ச்சிகளற்ற வடகிழக்கை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கனவை நனவாக்குவதில் இந்த ஒப்பந்தம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) மாணிக் சாஹா மற்றும் உள்துறை அமைச்சகம் மற்றும் திரிபுரா அரசின் மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, மத்திய அரசின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்திய என்.எல்.எஃப்.டி மற்றும் ஏ.டி.டி.எஃப் ஆகியவை, திரிபுராவில் 35 ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் அங்கு வளர்ச்சிக்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன என்று கூறினார்.
திரு. நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து, அமைதி மற்றும் பேச்சுவார்த்தை மூலம் திறமையான மற்றும் வளர்ச்சியடைந்த வடகிழக்கை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையை அவர் முன்வைத்துள்ளார் என்று திரு அமித் ஷா கூறினார். சாலை, ரயில் மற்றும் விமான இணைப்பு மூலம் புதுதில்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையிலான தூரத்தை பிரதமர் மோடி குறைத்தது மட்டுமல்லாமல், அவர்களின் இதயங்களில் உள்ள வேறுபாடுகளையும் குறைத்துள்ளார் என்று திரு ஷா மேலும் தெரிவித்தார். திரிபுரா உட்பட ஒட்டுமொத்த வடகிழக்குப் பகுதியையும் மேம்படுத்த இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
இன்றைய புரிந்துணர்வு ஒப்பந்தம் வடகிழக்கு மாநிலங்களுக்கான 12-வது ஒப்பந்தம் என்றும், திரிபுரா தொடர்பான மூன்றாவது ஒப்பந்தம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். இந்த 12 ஒப்பந்தங்கள் ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியாவதைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2051900
***
BR/KV
(Release ID: 2052080)
Visitor Counter : 51
Read this release in:
Odia
,
English
,
Khasi
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Bengali-TR
,
Assamese
,
Gujarati
,
Telugu
,
Kannada