ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு சதீஷ் குமார் பொறுப்பேற்றார்

Posted On: 01 SEP 2024 5:42PM by PIB Chennai

 ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு சதீஷ் குமார் இன்று பொறுப்பேற்றார். ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு சதீஷ் குமாரை நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு முன்னதாக ஒப்புதல் அளித்திருந்தது.

எந்திரவியல் பொறியாளர்களுக்கான இந்திய ரயில்வே சேவையின் (.ஆர்.எஸ்.எம்.) 1986 தொகுப்பின்  அதிகாரியான திரு சதீஷ் குமார், 34 ஆண்டுகளுக்கும் அதிகமான தனது பணிக்காலத்தில் இந்திய ரயில்வேக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளார்.  2022, நவம்பர்8 அன்று, அவர் பிரயாக்ராஜின் வட மத்திய ரயில்வேயின் பொது மேலாளராக பொறுப்பேற்றார். இது அவரது பொது சேவை பயணத்தில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது. ஜெய்ப்பூரின்  மாளவியா தேசியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில்  எந்திரப் பொறியியல் துறையில் பி.டெக்  பட்டம் பெற்ற அவர், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் செயல்பாட்டு மேலாண்மை மற்றும் சைபர் சட்டத்தில் முதுநிலை பட்டயத்துடன் தனது அறிவை  மேம்படுத்திக்கொண்டார்.

இந்திய ரயில்வேயில் திரு சதீஷ் குமாரின் பணி மார்ச் 1988 இல் தொடங்கியது. அதன் பின்னர், அவர் பல்வேறு மண்டலங்கள் மற்றும் பிரிவுகளில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில்  பணியாற்றியுள்ளார். ரயில்வே அமைப்பில் புதுமை, செயல்திறன், பாதுகாப்பு மேம்பாடுகளைக் கொண்டு வந்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: :https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2050631.

*****

SMB / KV



(Release ID: 2050659) Visitor Counter : 16


Read this release in: English , Urdu , Hindi