நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நில சுங்க நிலையங்களின் (எல்சிஎஸ்) செயல்பாடு குறித்த 4-வது தேசிய மாநாடு- புதுதில்லியில் சிபிஐசி நடத்திய 2 நாள் மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பு

Posted On: 30 AUG 2024 4:18PM by PIB Chennai

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியமான சிபிஐசி (CBIC), நில சுங்க நிலையங்களின் (LCS- எல்சிஎஸ்) செயல்பாடு குறித்த 4-வது தேசிய மாநாட்டை 2024 ஆகஸ்ட் 28, 29 தேதிகளில் புதுதில்லியில் நடத்தியது. இந்த இரண்டு நாள் மாநாட்டை மத்திய வருவாய்த் துறைச் செயலாளர் திரு சஞ்சய் மல்ஹோத்ரா தொடங்கி வைத்தார். சிபிஐசி தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால் தலைமை வகித்தார்.

இந்தியாவின் நில சுங்க நிலையங்கள், ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகளின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான தற்போதைய சவால்கள், எதிர்கால உத்திகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் அண்டை நாடுகளுடன் பயணிகளின் போக்குவரத்து குறித்து விவாதிக்கவும் இந்த இரண்டு நாள் மாநாடு ஒரு தளத்தை வழங்கியது.

இந்த மாநாட்டில் 100 க்கும் மேற்பட்ட நிபுணர்கள், துறைசார் முக்கியப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்இதில் கீழ்க்கண்ட குறிப்பிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன:

*அண்டை நாடுகளுடன் எல்சிஸ்-களில் வர்த்தகம், போக்குவரத்து வசதி

*கடத்தலை தடுப்பதற்கான மேலாண்மை உத்திகள்

*கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் சிறந்த நடைமுறைகள்

*எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள்

*பல்வேறு முகமைகளிடையே ஒத்துழைப்பு, தகவல் பகிர்வு

*திறம்பட்ட எல்லை மேலாண்மைக்கான திறன் மேம்பாடும் பயிற்சியும்

வருவாய் செயலாளர் திரு சஞ்சய் மல்ஹோத்ரா, சிபிஐசி தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால் முன்னிலையில் இந்தியாவின் நில சுங்க நிலையங்கள் தொடர்பான கையேட்டை வெளியிட்டார். இந்த கையேடு இந்தியாவின் நில சுங்க நிலையங்களைப் பற்றிய ஆழமான பார்வையை வழங்குகிறது. வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும், மண்டல இணைப்பை மேம்படுத்துவதற்கும், அண்டை நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இந்தக் கையேடு எடுத்துக்காட்டுகிறது.

மாநாட்டில், சிபிஐசி அமைப்புகளின் அதிகாரிகளைத் தவிர, வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், இந்திய நில துறைமுக ஆணையம், வர்த்தக -தொழில்துறை அமைச்சகம், இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம், ரயில்வே அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், சாலை போக்குவரத்து - நெடுஞ்சாலை அமைச்சகம், வேளாண் - விவசாயிகள் நல அமைச்சகம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு - பால்வள அமைச்சகம், இந்திய உணவு பாதுகாப்பு - தர நிர்ணய ஆணையம், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம், பல்வேறு மாநில அரசுகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

 ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான ஆராய்ச்சி கவுன்சில், ஆசிய- பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார - சமூக ஆணையம், இந்திய வர்த்தக - தொழில்துறை கூட்டமைப்பு போன்ற அமைப்புகளும் இதில் பங்கேற்றன.

நில சுங்க நிலையங்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவது, பூட்டான், வங்கதேசம், நேபாளத்தில் சிறப்பு கவனம் செலுத்தி அண்டை நாடுகளுடனான சர்வதேச எல்லைகளில் வர்த்தக வசதியை மேம்படுத்துவது குறித்து முதல் நாளில் விவாதங்கள் நடைபெற்றன.

இரண்டாவது நாளில், உள்கட்டமைப்பு மேம்பாடு, சரக்குப் போக்குவரத்துப் பிரச்சினைகள், மனிதவளப் பிரச்சினைகள், கடத்தல் தடுப்பு மேலாண்மை போன்றவை குறித்து விவாதங்கள் நடைபெற்றன.

இந்தியாவில் உள்ள நில சுங்க நிலையங்கள்

சுங்கச் சட்டம், 1962-ன் கீழ் 122 நில சுங்க நிலையங்கள் (எல்.சி.எஸ்) உள்ளன. இவை இந்தியாவின் 16 மாநிலங்களில் பரவியுள்ளன. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், சீனா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய 7 அண்டை நாடுகளுடன் வர்த்தகத்திற்காக இந்தியாவின் எல்லைகளில் இவை அமைந்துள்ளன. இந்த எல்சிஎஸ்- கள் சர்வதேச எல்லைகளைக் கடந்து பொருட்கள் மற்றும் மக்களின் சீரான போக்குவரத்தை எளிதாக்குகின்றன. சுங்க நடைமுறைகளை ஒருங்கிணைக்கவும், வர்த்தக வசதிக்கு உகந்த சூழலை உருவாக்கவும் சம்பந்தப்பட்ட அண்டை நாடுகளுடன் இருதரப்பு உரையாடல்களில் சிபிஐசி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

*****

PLM/ KV

 

 


(Release ID: 2050152) Visitor Counter : 51