நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இந்திய தர நிர்ணய அமைவனம், கல்வி ஆய்வுகளைத் தர நிர்ணயத்துடன் இணைக்கும் வகையில் இரண்டு மாநாடுகளை நடத்தியது
Posted On:
30 AUG 2024 1:21PM by PIB Chennai
இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS-பிஐஎஸ்) உதய்பூரிலும் தர்மசாலாவிலும் இரண்டு மாநாடுகளை ஏற்பாடு செய்து நடத்தியது. இது தேசிய, சர்வதேச தரப்படுத்தல் தேவைகளுடன் கல்வி ஆய்வுகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது.
கட்டுமானப் பொறியியல் (சிவில் இன்ஜினியரிங்) கல்விப் பிரிவில் உள்ள துறைத் தலைவர்களுக்கான மாநாட்டை பிஐஎஸ், 2024 ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ராஜஸ்தானின் உதய்பூரில் நடத்தியது. பிஐஎஸ் தலைமை இயக்குநர் திரு பிரமோத் குமார் திவாரி இதைத் தொடங்கி வைத்தார். தரப்படுத்தல் செயல்பாட்டில் கல்வியாளர்களின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார்.
இந்த மாநாடு சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த சிறந்த கல்வியாளர்களை ஒன்றிணைத்து. அறிவுப் பரிமாற்றத்துக்கும் ஒத்துழைப்புக்குமான தளத்தை இது வழங்கியது.
இதேபோன்ற மாநாடு இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவிலும் நேரத்தில் நடைபெற்றது. இதில் வேதியியல் பொறியியல், வேதியியல் துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். கல்வித் துறைப் பிரதிநிதிகளிடையே, பிஐஎஸ் துணைத் தலைமை இயக்குநர் திரு சந்தன் பாஹல், பிஐஎஸ் மாநில மனிதவளத் துறையின் தலைவர் டாக்டர் சூர்யா கல்யாணி ஆகியோர் உரையாற்றினர். இந்த அமர்வில் வேதியியல் பொறியியல், பெட்ரோ கெமிக்கல் துறையில் தரநிலைகள் பற்றிய விரிவான விவாதங்கள் இடம்பெற்றன.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள 92 கல்வி நிறுவனங்களுடன் பிஐஎஸ் தனது கூட்டு செயல்பாட்டை வலுப்படுத்தியுள்ளது. தேசிய தரப்படுத்தல் செயல்பாட்டில் கல்வியாளர்களை ஒரு முக்கியமான பங்குதாரராக பிஐஎஸ் அங்கீகரித்துள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கல்வி நிறுவனங்கள் இந்திய தர நிர்ணய அமைப்பின் தொழில்நுட்பக் குழுக்களில் தீவிரமாக பங்கேற்கவும், இந்திய தர நிர்ணய அமைப்பால் வழங்கப்படும் ஆராய்ச்சி - மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளவும், சர்வதேச தரப்படுத்தும் முயற்சிகளுக்கு பங்களிக்கவும் வழிவகுக்கும்.
இரண்டு மாநாடுகளின் போதும் பல தொழில்நுட்ப அமர்வுகள் நடத்தப்பட்டன. அவை சிவில் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், வேதியியல் துறைகளில் தரப்படுத்தலின் தொழில்நுட்ப அம்சங்களில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கின.
*****
PLM/ KV
(Release ID: 2050027)
Visitor Counter : 77