இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அதிகாரமளித்தல் பயிற்சித் திட்டத்தை டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்

Posted On: 29 AUG 2024 6:30PM by PIB Chennai

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அதிகாரமளித்தலுக்கான பயிற்சித் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ரீசெட் திட்டம் குறித்து பேசிய டாக்டர் மாண்டவியா, ரீசெட் திட்டம் நாட்டிற்காக விளையாடி, தேசத்திற்கு மகத்தான பெருமைகளைக் கொண்டு வந்த நமது ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அறிவு மற்றும் திறன்களுடன் அதிகாரம் அளிப்பதன் மூலமும், அவர்களை அதிக வேலைவாய்ப்புள்ளவர்களாக மாற்றுவதன் மூலமும், அவர்களின் தொழில் மேம்பாட்டு பயணத்தில் ஆதரவளிக்கும்.

ரீசெட் திட்டம் தலைமுறைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கும் என்றும், நமது ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களின் தனித்துவமான திறன்களை, ஆர்வமுள்ள  புதிய தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு பயனளிக்க அனுமதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர்களின் வளமான அனுபவம், எதிர்கால சாம்பியன்களை உருவாக்குவதற்கும், இந்தியாவில் விளையாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும், தேச நிர்மாணத்தை வளர்ப்பதற்கும் ஒரு அடித்தளமாக செயல்படும் என்று அவர் மேலும் கூறினார்.

அனைத்து ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களும், இந்த முயற்சிக்கு விண்ணப்பித்து, நாட்டின் விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்புக்கு தீவிரமாக பங்களிக்குமாறு, மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார். நமது ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் ஆதரவு அளிக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

ரீசெட் திட்டம், நமது ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களின் விலைமதிப்பற்ற அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை அங்கீகரித்து பயன்படுத்துவதை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

20 முதல் 50 வயதுக்குட்பட்ட விளையாட்டு வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெற்ற மற்றும் சர்வதேச பதக்கம் வென்றவர்கள்,  சர்வதேச போட்டிகளில் பங்கேற்பவர்கள் அல்லது தேசிய பதக்கம் வென்றவர்கள்  தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் இந்திய ஒலிம்பிக் சங்கம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் பங்கேற்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், ரீசெட் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். பிரத்யேக இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.

ஆரம்பத்தில், திட்டங்கள் கல்வித் தகுதியின் அடிப்படையில் இரண்டு நிலைகளாக இருக்கும், அதாவது 12-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் மற்றும் 11-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் என இருக்கும்.

ரீசெட் திட்டத்தின் இந்த முன்னோடி கட்டத்திற்கு, லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனம் (LNIPE) திட்டத்தை செயல்படுத்தும் முன்னணி நிறுவனமாக இருக்கும்.

கள பயிற்சி மற்றும் உள்ளகப் பயிற்சி ஆகியவற்றுடன், பிரத்யேக இணையதளம் மூலம் சுய-வேக கற்றலை உள்ளடக்கிய கலப்பின முறையில் இந்த திட்டம் வழங்கப்படும்.

விளையாட்டு அமைப்புகள், விளையாட்டு போட்டிகள் / பயிற்சி முகாம்கள் மற்றும் லீக் போட்டிகள் மூலம் இன்டர்ன்ஷிப் வழங்கப்படும். மேலும், தொழில்முனைவோர் முயற்சிகளுக்கான வழிகாட்டுதல், தொழில் முனைவோர் உதவிகள் போன்றவை பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவுடன் வழங்கப்படும்.

பதிவு செயல்முறை இன்றே httpslnipe.edu.inresetprogram இணையதளத்தில் தொடங்கும். உரிய மதிப்பீட்டிற்குப் பிறகு பாடநெறி தொடங்கும், அதுகுறித்து பங்கேற்பாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.

----

MM/KPG/DL

 


(Release ID: 2049902) Visitor Counter : 64