பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
தேசிய தொழில் பெருவழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 12 தொழில் முனையங்கள் நகரங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
28 AUG 2024 3:20PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.28,602 கோடி முதலீட்டில் 12 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை நாட்டின் தொழில்துறை சூழலை மாற்றியமைக்க அமைக்கப்பட்டுள்ளது, இது தொழில்துறை முனைகள் மற்றும் நகரங்களின் வலுவான கட்டமைப்பை உருவாக்குகிறது, இது பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை கணிசமாக அதிகரிக்கும்.
10 மாநிலங்களில், 6 முக்கிய வழித்தடங்களில் திட்டமிடப்பட்ட இந்தத் திட்டங்கள், அதன் உற்பத்தி திறன்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தராகண்டில் உள்ள குர்பியா, பஞ்சாபில் ராஜ்புரா-பாட்டியாலா, மகாராஷ்டிராவின் டிகி, கேரளாவில் பாலக்காடு, உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜ், பீகாரில் கயா, தெலங்கானாவில் ஜாஹீராபாத், ஆந்திராவில் ஓர்வகல் மற்றும் கொப்பார்த்தி மற்றும் ராஜஸ்தானில் ஜோத்பூர்-பாலி ஆகிய இடங்களில் இந்த தொழில்துறை பகுதிகள் அமையவுள்ளன.
இந்தத் தொழில்துறை முனையங்கள் 2030-ம் ஆண்டில் 2 டிரில்லியன் டாலர் ஏற்றுமதியை அடைவதற்கான ஊக்கிகளாக செயல்படும்.
திட்டமிட்ட தொழில்மயமாக்கல் மூலம் 1 மில்லியன் நேரடி வேலைகள் மற்றும் 3 மில்லியன் வரை மறைமுக வேலைகள் உருவாக்கப்படுவதன் மூலம் தேசிய தொழில் வழித்தட மே்பாட்டுத் திட்டம் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் பகுதிகளின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கும் பங்களிக்கும்.
----
(Release Id 2049312
IR/KPG/KR
(Release ID: 2049362)
Visitor Counter : 125
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Hindi_MP
,
Nepali
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam