பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடலோர காவல்படை இரவுநேர மீட்பு பணியில் ஈடுபட்டு 11 உயிர்களைக் காப்பாற்றியது

Posted On: 26 AUG 2024 2:50PM by PIB Chennai

இந்திய கடலோர காவல்படை ஆகஸ்ட் 26, 2024 அன்று ஒரு சவாலான இரவு நேர மீட்பு நடவடிக்கையின் போது 11 பேரை மீட்டது. சரக்கு ஒன்று கப்பல் கொல்கத்தாவில் இருந்து போர்ட் பிளேர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, சாகர் தீவுக்கு (மேற்கு வங்கம்) தெற்கே சுமார் 90 கடல் மைல் தொலைவில் மூழ்கியதாக தகவல் கிடைத்தது.

சென்னையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு 2024, ஆகஸ்ட் 25, அன்று மாலை இந்தத் தகவல் கிடைக்கப்பெற்றது. கொல்கத்தாவில் உள்ள .சி.ஜியின் பிராந்திய தலைமையகம் (வடகிழக்கு) உடனடியாக இரண்டு .சி.ஜி கப்பல்களையும் ஒரு டோர்னியர் விமானத்தையும் சம்பவ இடத்திற்கு அனுப்பியது.

டோர்னியர் விமானத்தின் வழிகாட்டுதலுடன், .சி.ஜி கப்பல் சம்பவ இடத்தை அடைந்தது. சவாலான வானிலை இருந்தபோதிலும், .சி.ஜி கப்பல்களான சாரங் மற்றும் அமோக், டோர்னியர் விமானத்துடன் சேர்ந்து, ஒருங்கிணைந்த கடல்-விமான மீட்பை மேற்கொண்டு, கடலில் தத்தளித்த 11 பேரை பத்திரமாக மீட்டன.

******

(Release ID: 2048896)


(Release ID: 2048914) Visitor Counter : 76