குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஜென்மாஷ்டமியை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

Posted On: 25 AUG 2024 2:34PM by PIB Chennai

ஜென்மாஷ்டமியை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

"ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெய்வீக அன்பு, ஞானம், நீதி ஆகியவற்றை உள்ளடக்கிய கிருஷ்ணரின் பிறப்பைக் குறிக்கும் ஜென்மாஷ்டமி, ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.

இந்தத் திருவிழா தர்மத்தின் நிலையான மதிப்புகள், தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றி, உண்மை, இரக்கத்தில் வேரூன்றிய வாழ்க்கையை வழிநடத்துவதன் முக்கியத்துவம் ஆகியவற்றை நினைவூட்டுகிறது. இந்த புனித நாளைக் கொண்டாடும் போது, பகவான் கிருஷ்ணரின் எக்காலத்துக்கும் பொருந்தும் போதனைகளைப் பின்பற்றுவோம், அவற்றின்படி வாழ முயற்சிப்போம். நமது சமூகத்தில் ஒற்றுமை, அமைதி, நல்லிணக்கத்தை வளர்ப்போம்.

இந்த தெய்வீகத் தருணத்தில், நேர்மையின் பாதையைப் பின்பற்றி, அனைவரின் நலனுக்காகவும் உழைப்போம் என்று உறுதியேற்போம்.

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!"

*****

PLM / KV

 

 


(Release ID: 2048738) Visitor Counter : 49