பாதுகாப்பு அமைச்சகம்
அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களின் மூத்த பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வாஷிங்டனில் கலந்துரையாடினார்
Posted On:
24 AUG 2024 6:28PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், 24 ஆகஸ்ட் 2024 அன்று வாஷிங்டன் டிசி-யில் அமெரிக்க இந்தியா உத்திசார் ஒத்துழைப்பு மன்றம் ஏற்பாடு செய்திருந்த தொழில்துறை வட்டமேஜை மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களின் மூத்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இந்தியாவில் பாதுகாப்புத் துறையில் உருவாகி வரும் பல்வேறு கூட்டு உற்பத்தி வாய்ப்புகளை அவர் எடுத்துரைத்தார். இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட முற்போக்கான சீர்திருத்தங்கள், அமெரிக்கா உட்பட பல அயல்நாட்டு அசல் உபகரண உற்பத்தியாளர்களை இந்தியாவில் உற்பத்திக் குழுக்களை அமைக்கவும், கூட்டு முயற்சிகளை மேம்படுத்தவும், இந்தியாவை தங்களது மாற்று ஏற்றுமதி அடித்தளமாக மாற்றவும் ஊக்குவித்துள்ளன. இந்தியாவில் ஜிஇ 414 ஏரோ-இன்ஜின்களின் திட்டமிடப்பட்ட கூட்டு உற்பத்தி இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும்.
'ஒத்துழைப்பு', 'கூட்டு முயற்சிகள்' ஆகியவை மற்ற நாடுகளுடனான இந்தியாவின் பாதுகாப்புத் தொழில் ஒத்துழைப்பை வேறுபடுத்தும் இரண்டு முக்கிய வார்த்தைகள் என்று திரு ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில் போயிங், ஜிஇ, ஜெனரல் அட்டாமிக்ஸ், ஜெனரல் டைனமிக்ஸ் லேண்ட் சிஸ்டம்ஸ், எல் 3 ஹாரிஸ், லாக்ஹீட் மார்ட்டின், ரேதியான் டெக்னாலஜிஸ், ரோல்ஸ் ராய்ஸ், தாயர்மஹான் போன்ற முக்கிய அமெரிக்க பாதுகாப்பு, தொழில்நுட்ப நிறுவனங்களின் மூத்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும், ஐடியாஃபோர்ஜ், டாடா சன்ஸ், டிசெகண்ட் போன்ற சில இந்திய நிறுவனங்களும், தி கோஹன் குழுமத்தின் மூத்த பிரதிநிதிகளும் பாதுகாப்பு அமைச்சருடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். இந்த கலந்துரையாடலின் போது, வர்த்தகத் தலைவர்கள் இந்தியாவுக்கான தங்களது தற்போதைய திட்டங்கள், எதிர்காலத் திட்டங்களை சுருக்கமாக விளக்கியதுடன், மதிப்புமிக்க கருத்துக்களையும் வழங்கினர்.
*****
PLM / KV
(Release ID: 2048556)
Visitor Counter : 54