பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

‘பொது நிர்வாகம் மற்றும் ஆளுகை சீர்திருத்த துறையில் ஒத்துழைப்புக்கான’ ஐந்தாண்டு காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறையும், மலேசிய அரசின் பொதுச் சேவை துறையும் கையெழுத்திட்டுள்ளன

Posted On: 23 AUG 2024 1:15PM by PIB Chennai

மத்திய அரசின் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்திற்கு உட்பட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறை மற்றும் மலேசிய அரசின் பொதுச் சேவைத் துறையுடன், 2024 ஆகஸ்ட் 20 முதல் ஐந்தாண்டு காலத்திற்கு 'பொது நிர்வாகம் மற்றும் ஆளுமை சீர்திருத்தத் துறையில் ஒத்துழைப்பு' குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்றத்திற்கான விழா, பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மலேசிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் பின் இப்ராஹிம் முன்னிலையில் 2024 ஆகஸ்ட் 20 புதுதில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்றது.

டிஜிட்டல் தளத்தின் மூலம், மக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்கும் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இரு நாடுகளும் முயற்சிப்பதை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. டிஜிட்டல் தளத்தின் மூலம் பொதுச் சேவைகளை திறம்பட வழங்குவதற்காக, அரசின் செயல்முறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் மறு நிர்மாணம் செய்தல்; பொதுச் சேவைகளை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவித்தல்; மனித வள மேலாண்மை / தலைமைத்துவ மேம்பாடு; பொதுத்துறை மேலாண்மை மற்றும் சீர்திருத்தங்கள்; பொதுமக்கள் குறை தீர்க்கும் வழிமுறைகள்; மற்றும் மின் ஆளுமை / டிஜிட்டல் அரசாங்கம் போன்றவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஒத்துழைப்பை அமல்படுத்துவதற்கு பொறுப்பான கூட்டு பணிக்குழு ஒன்று அமைக்கப்படும் .

***

(Release ID: 2048029)

MM/AG/KR



(Release ID: 2048076) Visitor Counter : 14