பிரதமர் அலுவலகம்
போலந்து அதிபருடன் பிரதமர் சந்திப்பு
प्रविष्टि तिथि:
22 AUG 2024 8:14PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி, வார்சாவில் உள்ள பெல்வேடர் மாளிகையில் இன்று(22.08.2024), போலந்து அதிபர் திரு.ஆன்டர்சேஜ் செபஸ்டியன் டூடா-வை சந்தித்துப் பேசினார்.
இரு தலைவர்களும், இருதரப்பு உறவு சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர். இந்தியா-போலந்து நட்புறவை, நீடித்த பங்குதாரர் நிலைக்கு மேம்படுத்தியிருப்பதை, அவர்கள் வரவேற்றனர். உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நடைபெறும் மோதல்கள் உட்பட, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
‘ஆபரேசன் கங்கா’ நடவடிக்கையின்போது, உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கு, உரிய நேரத்தில், மதிப்புமிக்க முறையில் உதவியதற்காக, போலந்திற்கு பிரதமர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
அதிபர் டூடா-வை இந்தியாவிற்கு வருகை தருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
Release ID: 2047814
***
MM/KR
(रिलीज़ आईडी: 2047949)
आगंतुक पटल : 75
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam