குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 18 AUG 2024 7:47PM by PIB Chennai

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

"ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரக்ஷா பந்தன் என்பது சகோதர, சகோதரிகளுக்கு இடையேயான தனித்துவமான பிணைப்பின் கொண்டாட்டமாகும், இது அன்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் உணர்வுகளை வலுப்படுத்துகிறது. இந்தப் பண்டிகை மத மற்றும் கலாச்சார எல்லைகளைத் தாண்டி நம் நாட்டின் பன்முகத்தன்மையில் ஒற்றுமையைக் குறிக்கிறது. பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை இந்தப் பண்டிகை வலுப்படுத்துகிறது.

இந்த நன்னாள், நல்லிணக்கம் மற்றும் அன்பின் உணர்வை வளர்க்கட்டும், சமூகத்தில் பெண்களுக்கான மரியாதையை அதிகரிக்கட்டும்."

குடியரசுத்தலைவரின் முழுமையான வாழ்த்துச் செய்தியை இங்கே காணவும்:https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/aug/doc2024818378001.pdf

***

(Release ID: 2046445)

BR/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2046501) வருகையாளர் எண்ணிக்கை : 104
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Bengali , Punjabi , Telugu