சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாற்றுத்திறனாளிகளின் கண்ணியத்தை உறுதி செய்யும் முடிவுகள் பிரதமரின் சுதந்திர தின உரையில் இடம் பெற்றுள்ளது

प्रविष्टि तिथि: 15 AUG 2024 2:25PM by PIB Chennai

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தில்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, மாற்றுத்திறனாளிகளின் கண்ணியத்தை உறுதி செய்து, அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த அரசு உறுதி பூண்டிருப்பதாக தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள் தாங்கள் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் வாழ்கிறோம் என்று உணரத்தக்க வகையில்,  கருணை அடிப்படையிலான புதிய முடிவுகளை அரசு உருவாக்கி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பொது இடங்கள் மற்றும் போக்குவரத்து சாதனங்களை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அனுகும் வகையிலான சூழலை உருவாக்குவதற்கான சுகம்யா பாரத் திட்டம், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதற்கான சப்போர்ட் ஃபார் பாராலிம்பியன்ஸ் மற்றும் பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான ஒளிரும் மொழி உருவாக்கம் போன்ற திட்டங்களையும் பிரதமர் தமது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2045595

***

MM/RJ/KV


(रिलीज़ आईडी: 2045610) आगंतुक पटल : 112
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Manipuri , Punjabi , Telugu , Kannada