விவசாயத்துறை அமைச்சகம்
அரசு திட்டங்களின் மூலம் பயனடைந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு
Posted On:
14 AUG 2024 5:20PM by PIB Chennai
78-வது சுதந்திர தினத்தின் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் (MoA &FW) 1,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு, வயல்களின் ஹீரோக்களை கௌரவிக்கும் இரண்டு நாள் சிறப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தது. இந்த விவசாயிகளில் பிரதமர்-கிசான் சம்மான் நிதி திட்டம், பிரதமரின் பயிர்காப்பீட்டுத்திட்டம், உழவர் உற்பத்தியாளர் அமைப்பின் பிரதிநிதிகள் போன்ற மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகள் அடங்குவர்.
ஆகஸ்ட் 15 அன்று, சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் பூசாவில் உள்ள சுப்ரமணியம் அரங்கில் கூடி, மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகானுடன் கலந்துரையாடுவார்கள். இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர்கள் திரு ராம்நாத் தாக்கூர், திரு பகீரத் சவுத்ரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில், திரு சிவராஜ் சிங் சவுகான், தேசிய பூச்சி கண்காணிப்பு முறையை (என்.பி.எஸ்.எஸ்) தொடங்கி வைக்கிறார். வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இந்த டிஜிட்டல் முயற்சி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (ML) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான பூச்சி மேலாண்மை ஆலோசனைகளை வழங்குகிறது. இந்த அமைப்பு அனைத்து விவசாயிகளுக்கும் அணுகலை உறுதி செய்யும் பயனாளிக்க உகந்த செல்போன் செயலி மற்றும் ஒரு வலைதளத்தை உள்ளடக்கியது. நிகழ்நேர தரவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுகளை மேம்படுத்துவதன் மூலம், தேசிய பூச்சி கண்காணிப்பு முறை பூச்சிகளை துல்லியமாக அடையாளம் காணுதல், கண்காணிப்பு, மேலாண்மை ஆகியவற்றை செயல்படுத்துகிறது.
என்.பி.எஸ்.எஸ் மூலம் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள், ஏனெனில், இது பூச்சி தாக்குதல்கள் மற்றும் பயிர் நோய்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்குகிறது, பயிர் இழப்புகளைக் குறைத்து அதன் மூலம் உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது. அமைப்பின் விரிவான பூச்சி நிகழ்வு தரவு மற்றும் தானியங்கி ஆலோசனைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும், இது தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும், அவர்களின் பயிர்களைப் பாதுகாக்க, செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்கவும் உதவும்.
என்.பி.எஸ்.எஸ் தொடங்கப்பட்டது, இந்தியாவில் விவசாயத்தை நவீனமயமாக்குவதிலும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும், நிலையான விவசாய நடைமுறைகளை ஆதரிப்பதிலும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. விவசாயிகளின் நலனுக்காகவும், வேளாண் துறையின் முன்னேற்றத்திற்காகவும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதிலும் அரசின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஒரு வளமான அனுபவத்திற்காக, விஞ்ஞானிகளுடன் விவசாயிகளின் நேரடி தொடர்பை எளிதாக்கும் வகையில் 14 ஆகஸ்ட் 2024அன்று புகழ்பெற்ற பூசா வளாகத்திற்கு ஒரு விரிவான கள விஜயம் மேற்கொண்டுள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
பசுமை இல்ல அலங்கார நாற்றங்கால், சொட்டு நீர் பாசனத்தின் கீழ் காய்கறி சாகுபடி, காளான் அலகு IFS-மானாவாரி அமைப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை மனை, பண்ணை இயந்திரங்கள் பட்டறை, தினை தொகுதி, அரிசி தொகுதி, உரம் தயாரிக்கும் அலகு உள்ளிட்ட பல்வேறு தொகுப்புகள் மற்றும் தொகுதிகள் மூலம் விவசாயிகளை விஞ்ஞானிகளுடன் இணைக்கும் நோக்கத்துடன் IARI – பூசா வளாகத்தில் விவசாயிகள் வழிகாட்டப்பட்டனர்.
இந்த கள விஜயம் விவசாயிகளுக்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அவர்களின் விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான நிலையான விவசாய முறைகள் பற்றிய முதல் புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது, இது சிறந்த வருமான வாய்ப்புகளுக்கு வழிவகுக்கிறது.
*****
MM/RS/DL
(Release ID: 2045393)
Visitor Counter : 109