பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
இந்திய ரயில்வேயில் எட்டு புதிய வழித்தட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
09 AUG 2024 9:58PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 24,657 கோடி ரூபாய் (தோராயமாக) மொத்த மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் எட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
புதிய வழித்தட முன்மொழிவுகள் நேரடி இணைப்பை வழங்குவதுடன், நகர்வை மேம்படுத்துவதுடன், இந்திய ரயில்வேக்கு மேம்பட்ட செயல்திறன் மற்றும் சேவை நம்பகத்தன்மையை வழங்கும். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தத் திட்டங்கள் உள்ளன. இது இப்பகுதியில் உள்ள மக்களை "தற்சார்பாளர்" ஆக மாற்றி, இப்பகுதியில் விரிவான வளர்ச்சியை ஏற்படுத்தி, அவர்களின் வேலைவாய்ப்பு / சுய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும்.
இந்தத் திட்டங்கள் பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் விளைவாக உருவானவை. இவை ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் சாத்தியமாகியுள்ளன. மக்கள், சரக்குகள் மற்றும் சேவைகளின் இயக்கத்திற்கு தடையற்ற இணைப்பை வழங்கும்.
ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார், தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 14 மாவட்டங்களை உள்ளடக்கிய எட்டு திட்டங்கள் தற்போதுள்ள இந்திய ரயில்வேயின் வலையமைப்பை 900 கி.மீ. அளவுக்கு அதிகரிக்கும்.
இந்தத் திட்டங்களின் மூலம், 64 புதிய நிலையங்கள் கட்டப்படும். இது ஆறு முன்னேற விரும்பும் மாவட்டங்களின் சுமார் 510 கிராமங்கள் மற்றும் சுமார் 40 லட்சம் மக்கள் தொகைக்கு இணைப்பை மேம்படுத்தும்.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான அஜந்தா குகைகள் இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்படும்.
வேளாண் பொருட்கள், உரம், நிலக்கரி, இரும்புத் தாது, எஃகு, சிமெண்ட், பாக்சைட், சுண்ணாம்புக்கல், அலுமினியத் தூள், கிரானைட், நிலைப்படுத்து, கொள்கலன்கள் போன்ற பொருட்களை எடுத்துச் செல்வதற்கான முக்கிய வழித்தடங்கள் இவை. திறன் விரிவாக்கப் பணிகளின் மூலம் ஆண்டுக்கு 143 மில்லியன் டன்கள் என்ற அளவில் கூடுதல் சரக்கு போக்குவரத்து ஏற்படும். ரயில்வே, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், எரிசக்தித் திறன்மிக்க போக்குவரத்து முறையாகவும் இருப்பதால், பருவநிலை இலக்குகளை அடைவதற்கும், நாட்டின் சரக்கு போக்குவரத்து செலவைக் குறைப்பதற்கும், எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும் (32.20 கோடி லிட்டர்) கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் (0.87 மில்லியன் டன்) இது உதவும். இது 3.5 கோடி மரங்களை நடுவதற்கு சமமாகும்.
வ. எண். புதிய ரயில் பாதை தூரம்
(கிமீ) உள்ளடக்கிய மாவட்டங்கள் மாநிலம்
1 குணுபூர்-தேருபாலி (புதிய பாதை) 73.62 ராயகடா ஒடிசா
2 ஜுனாகர்-நப்ரங்பூர் 116.21 காலஹண்டி நப்ரங்பூர் ஒடிசா
3 பதம்பஹார் - கந்துஜார்கர் 82.06 கியோஞ்சர் மயூர்பஞ்ச் ஒடிசா
4 பாங்ரிபோசி - கௌருமாஹிசானி 85.60 மயூர்பஞ்ச் ஒடிசா
5 மல்கன்கிரி - பாண்டுரங்கபுரம் (பத்ராச்சலம் வழியாக) 173.61 மல்கன்கிரி, கிழக்கு கோதாவரி மற்றும் பத்ராத்ரி கோதகூடம் ஒடிசா, ஆந்திரா தெலுங்கானா
6 Buramara – Chakulia 59.96 கிழக்கு சிங்பூம், ஜார்கிராம் மயூர்ப்னாஞ்ச் ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஒடிசா
7 ஜல்னா - ஜல்கான் 174 அவுரங்காபாத் மகாராஷ்டிரா
8 பிக்ரம்ஷிலா - கட்டாரஹ் 26.23 பாகல்பூர் பீகார்
*****
PKV/DL
(Release ID: 2044086)
Visitor Counter : 50
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Hindi_MP
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam