சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் மொத்தம் 28 இ-சேவை மையங்கள்

Posted On: 09 AUG 2024 12:35PM by PIB Chennai

மின்னணு நீதிமன்ற குறிக்கோள் திட்டத்தின் ஒரு பகுதியாக, நீதிமன்ற வழக்குகள், ஆணைகள், தீர்ப்புகள் குறித்த விவரங்கள், நீதிமன்றங்கள் தொடர்பான விஷயங்கள், மின்னணு முறையில் தாக்கல் செய்ய வசதி அளித்தல், குறிப்பாக தொழில்நுட்ப வசதி இல்லாதவர்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பயன்பெறும் வகையில், மின்னணு சேவை மையங்கள்  இயங்கி வருகின்றன. இதுவரை நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் 1072 இ-சேவை மையங்களும் உயர்நீதிமன்றங்களில் 27 இ-சேவை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி சென்னை உயர்நீதிமன்றத்திலும் அதற்கு உட்பட்ட மாவட்ட நீதிமன்றங்களிலுமாக மொத்தம் 28 இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.

இத்தகவலை மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மெக்வால் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

 

***

(Release ID: 2043471)

 



(Release ID: 2043655) Visitor Counter : 26