சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

கிராம நியாயாலயங்கள்

Posted On: 09 AUG 2024 12:36PM by PIB Chennai

2009 அக்டோபர் 2 முதல் அமலுக்கு வந்துள்ள கிராம நியாயாலயாக்கள் சட்டம், 2008, குடிமக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திலேயே மலிவான மற்றும் விரைவான நீதி கிடைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கிராம நியாயாலயங்கள் சட்டம், 2008- ன் பிரிவு 3 (5)-ன் படி, மாநில அரசுகள் அந்தந்த உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு கிராம நியாயாலயாவுக்கும் முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட் பதவியில் உள்ள ஒரு அதிகாரியை நியமிக்கின்றன, அவர் சூழ்நிலைக்கேற்ப  நடமாடும் நீதிமன்றங்களை நடத்த வேண்டும். கிராம நியாயாலயங்கள் சட்டம், 2008-ன் கீழ், "கிராம நியாயாலயாக்களை நிறுவுவதற்கும் இயக்குவதற்கும் மாநில அரசுகளுக்கு உதவி" என்ற தலைப்பில் ஒரு திட்டம் 2009-ல் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் கிராம நியாயாலயங்கள் திட்டத்தை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களும் வகுக்கப்பட்டன.

இதுவரை 15 மாநிலங்களில் 481 கிராம நியாயாலயங்கள் அறிவிக்கை செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 10 மாநிலங்களில் 309 கிராம நியாயாலயங்கள் செயல்பட்டு வருகின்றன. அறிவிக்கப்பட்ட மற்றும் செயல்பாட்டில் உள்ள கிராம நியாயாயாக்களின் மாநில வாரியான விவரங்கள் பின்வருமாறு:

இந்த தகவலை மத்திய சட்டம்-நீதித்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2043473)

MM/AG/KR

 



(Release ID: 2043646) Visitor Counter : 17


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP