உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பல்பொருள் உணவு அலகுகள் அமைக்க விருப்பம் முன்மொழிவுகளை உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் வரவேற்கிறது

Posted On: 09 AUG 2024 12:20PM by PIB Chennai

2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, மத்திய அரசின் குடைத் திட்டமான பிரதமரின் உழவர்  நலத்திட்டத்தின் ஒரு அங்கமான ஒருங்கிணைந்த குளிர்பதன சங்கிலி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உள்கட்டமைப்பின் (குளிர்பதன சங்கிலி திட்டம்) கீழ் பல்பொருள் உணவு அலகுகளை அமைப்பதற்கு வருங்கால தொழில்முனைவோரிடமிருந்து விருப்ப வெளிப்பாட்டை  உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் வரவேற்றுள்ளது. தேவை உந்துதல் குளிர்பதன சங்கிலி திட்டத்தின் கீழ் தகுதியான திட்டங்களுக்கு மானிய உதவி  மானியம் வடிவில் நிதி உதவி வழங்கப்படும்.

நிறுவனங்கள் தங்கள் முன்மொழிவுகளைஆன்லைனில் httpswww.sampada-mofpi.gov.in பொருத்தமான விவரங்களுடன் (பொருத்தமான தலைப்புகளின் கீழ்) மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். 06ஆகஸ்ட்2024 தேதியhttpswww.mofpi.gov.in திட்ட ஒருங்கிணைந்த குளிர் சங்கிலி மற்றும் மதிப்பு கூட்டல் உள்கட்டமைப்புக்கான திட்டம் - உணவு கதிர்வீச்சு அலகுகளை அமைத்தல் என்ற தலைப்பில் உள்ள திட்ட வழிகாட்டுதல்களின்படி அனைத்து முன்மொழிவுகளும் தயாரிக்கப்பட்டு உரிய தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 21செப்டம்பர்2024 ஆகும்.

----

(Release ID 2043463)

PKV/KPG/KR


(Release ID: 2043633) Visitor Counter : 46