குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் திரு புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவிற்கு, குடியரசுத் துணைத் தலைவர் இரங்கல்
प्रविष्टि तिथि:
08 AUG 2024 4:34PM by PIB Chennai
மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் திரு புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவிற்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக "எக்ஸ் தளத்தில்" பதிவிட்டிருப்பதாவது:
"மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் திரு. புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன்.
மேற்கு வங்க ஆளுநராக இருந்தபோது பலமுறை அவருடைய அறிவார்ந்த ராஜதந்திர ஆலோசனையின் பலனை நான் பெற்றிருக்கிறேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு, இந்த இழப்பை தாங்கும் மன உறுதியை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க பிரார்த்திக்கிறேன்.
***
IR/RS/KR/DL
(रिलीज़ आईडी: 2043373)
आगंतुक पटल : 85