கலாசாரத்துறை அமைச்சகம்
இந்தியாவில் உள்ள உலகப் பாரம்பரிய தலங்கள்
Posted On:
08 AUG 2024 2:02PM by PIB Chennai
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து இடங்கள், உலக பாரம்பரிய தலங்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட இடங்களின் பட்டியல் இணைப்பு-2ல் இணைக்கப்பட்டுள்ளது.
உலக பாரம்பரிய பட்டியலில் தலங்களைச் சேர்ப்பது நாட்டிற்கு பெருமைகளைக் கொண்டுவருவதுடன் பார்வையாளர்களையும் ஈர்க்கிறது, இது பொருளாதார வளர்ச்சி மற்றும் இடத்தைச் சுற்றியுள்ள சுற்றுலாவை அதிகரிக்கிறது. புதிதாக பரிந்துரைக்கப்பட்ட உலக பாரம்பரிய தலமான மொய்தாம் வளாகத்தில், சுற்றுலா மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக மழை முகாம்கள், பாதைகள், அறிவிப்பு பலகைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மாமல்லபுரம் நினைவுச்சின்னங்கள், தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரத்தில் உள்ள சோழர் கால கோவில்கள், நீலகிரி மலை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
***
MM/AG/KR/DL
(Release ID: 2043160)
Visitor Counter : 78