பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடியின மாணவர்களுக்கு செமிகண்டக்டர் தொழில்நுட்ப பயிற்சி
Posted On:
08 AUG 2024 1:12PM by PIB Chennai
மத்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகம், 'பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான செமிகண்டக்டர் கட்டுருவாக்கம் மற்றும் இயல்பாய்வு குணாதிசயப் பயிற்சி' என்ற திட்டத்தை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் நானோ அறிவியல் மற்றும் பொறியியல் மையத்திடம் ஒப்படைத்துள்ளது - பழங்குடி ஆராய்ச்சி தகவல், கல்வி, தொடர்பு மற்றும் நிகழ்வுகள் 2023-24-ம் நிதியாண்டில். மூன்று ஆண்டுகளில் பழங்குடி மாணவர்களுக்கு செமிகண்டக்கடர் தொழில்நுட்பத்தில் 2100 என்எஸ்க்யூஎஃப் சான்றளிக்கப்பட்ட நிலை 6.0 & 6.5 பயிற்சியை வழங்குவதை, இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம், பெங்களூரு இந்திய அறிவியல் நிலையத்துடன் இணைந்து 1500 பழங்குடியின மாணவர்களுக்கு அடிப்படைப் பயிற்சியையும், 600 பழங்குடியின மாணவர்களுக்கு செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட பயிற்சியையும் அடுத்த மூன்று ஆண்டுகளில் வழங்கும். பொறியியல் பாடங்களில் ஒன்றில் பட்டம் பெற்ற அனைத்து பழங்குடியின மாணவர்களும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிப்பதற்காக, 6 பெரிய நானோ மையங்களை உருவாக்கியுள்ளது. இந்த நானோ மையங்களில் உள்ள பட்டப்படிப்புகளில் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளின்படி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளனர்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் யுகே இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042991
***
IR/RS/KR
(Release ID: 2043091)
Visitor Counter : 66