ஜல்சக்தி அமைச்சகம்

ஜல்ஜீவன் இயக்கத்தின் தாக்கம்

Posted On: 08 AUG 2024 1:10PM by PIB Chennai

நாடு முழுவதும் 15 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ஜல்சக்தித் துறை இணையமைச்சர் திரு வி.சோமன்னா கூறியுள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டுமென்ற நோக்கத்துடன் ஜல்ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 55 லிட்டர் வீதம் தரமான தண்ணீர் வழங்குவதே இதன் நோக்கமாகும்.

2019 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை தொடங்கிய போது கிராமப்புறங்களில் உள்ள 3.23 கோடி வீடுகளுக்கே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் 5.8.2024 நிலவரப்படி 11.81 கோடி வீடுகளுக்கு கூடுதலாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 19.32 கோடி கிராமப்புற வீடுகளில் இதுவரை 15.04 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மொத்தத்தில் 77.87 சதவீதமாகும்.

இந்தத் திட்டத்தை கிராம பஞ்சாயத்து அளவில் 5.32 லட்சம் தண்ணீர் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. களப் பரிசோதனை உபகரணங்கள் மூலம் தண்ணீர் மாதிரிகளை பரிசோதிக்க 24.64 லட்சம் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் 54.20 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042989

***

PKV/RR/KV

 



(Release ID: 2043055) Visitor Counter : 41