புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்னணுக் கழிவுகளின் மேலாண்மை

प्रविष्टि तिथि: 07 AUG 2024 3:42PM by PIB Chennai

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மின்னணு கழிவு (மேலாண்மை) விதிகள், 2022-ஐ அறிவித்துள்ளது, இது 2023 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த விதிகள் ஐந்தாவது அத்தியாயத்தின் விதிகளுக்கு உட்பட்டு, சூரிய ஒளி-மின்னழுத்த தொகுதிகள் அல்லது பேனல்கள் அல்லது மின்கலங்களுக்கு பொருந்தும்.

 

காற்றாலை சுழலியின் பெரும்பான்மையான பாகங்கள் மறுசுழற்சி செய்யக்கூடிய உலோகங்களால் ஆனவை. பிளேடுகளில் பயன்படுத்தப்படும் ஃபைபர் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் (FRP) பிளேடுகளுக்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) மே 26 2016 அன்று 'ஷீட் மோல்டிங் கலவை / ஃபைபர் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட தெர்மோசெட் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்கான வழிகாட்டுதல்களை' வெளியிட்டுள்ளது.

 

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு. ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

***

(Release ID: 2042615)

PKV/RR/KR


(रिलीज़ आईडी: 2042955) आगंतुक पटल : 107
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu