இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரீஸ் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்ட சரப்ஜோத் சிங் தலைமையிலான ஆறு துப்பாக்கி சுடும் வீரர், வீராங்கனைகளுக்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டு

Posted On: 01 AUG 2024 7:29PM by PIB Chennai

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய துப்பாக்கி சுடும் அணியின் சிறப்பான செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே ஆகியோர் இணைந்து ஆறு சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்களை அவர்கள் நாடு திரும்பிய பிறகு பாராட்டினர். மனு பாக்கருடன் இணைந்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் சரப்ஜோத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ரொக்கப் பரிசு திட்டத்தின் ஒரு பகுதியாக, சரப்ஜோத் சிங்கிற்கு ரூ.22.5 லட்சத்திற்கான காசோலையை டாக்டர் மாண்டவியா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அர்ஜுன் பாபுதா, ரமிதா ஜிண்டால், ரிதம் சங்வான், சந்தீப் சிங் மற்றும் அர்ஜுன் சிங் சீமா மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் சுமா ஷிரூர், சமரேஷ் ஜங் மற்றும் சரப்ஜோத்தின் தனிப்பட்ட பயிற்சியாளர் அபிஷேக் ராணா ஆகியோரின் பங்களிப்பிற்கும் பாராட்டு தெரிவித்தது. களையும் அங்கீகரித்தது. குறிப்பாக, ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் அர்ஜுன் பாபுதா 4 வது இடத்தைப் பிடித்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விழாவில் பேசிய டாக்டர் மாண்டவியா, விளையாட்டு வீரர்களைப் பாராட்டியதோடு, "நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சாம்பியன். உங்களில் சிலருக்கு நீங்கள் நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்டீர்கள் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வது கடினம் என்று எனக்குத் தெரியும், ஆனால் அந்த தோல்வி விளையாட்டின் மீதான உங்கள் ஆர்வத்தைக் குறைக்க அனுமதிக்காதீர்கள். அதற்கு பதிலாக, எதிர்கால போட்டிகளில் சிறந்து விளங்குவதற்கான உங்கள் உந்துதலைத் தூண்டட்டும்.
கேலோ இந்தியா திட்டத்தின் தாக்கத்தை எடுத்துரைத்த டாக்டர் மாண்டவியா, "இந்த முறை, 117 விளையாட்டு வீரர்களில், 70 பேர் முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர், இது நம் நாட்டில் புதிய திறமைகளின் எழுச்சியைக் காட்டுகிறது. இந்த 117 விளையாட்டு வீரர்களில், 28 பேர் விளையாடு இந்தியாவிலிருந்து வந்தவர்கள், இப்போது இலக்கு ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். இதன் பொருள் அடிமட்ட மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை, அவர்கள் தொடர்ந்து செயல்பட்டுள்ளனர் மற்றும் இரண்டு திட்டங்களிலிருந்தும் ஆதரவைப் பெற்றுள்ளனர்.
விளையாட்டு வீரர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை வலியுறுத்திய டாக்டர் மாண்டவியா,   விளையாட்டு வீரர்களின் கடின உழைப்பு, அவர்களின் பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் உந்துதல், அவர்களின் இறுதி வெற்றியை உறுதி செய்கிறது என்றார்.
2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதென்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலை நோக்குப் பார்வையில் விளையாட்டு பெரும் பங்கு வகிக்கும். 2047-ம் ஆண்டுக்குள் விளையாட்டு சூழல் அமைப்பின் அடிப்படையில் உலகின் முதல் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்றும் திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
"நாடு தழுவிய விளையாட்டு திறமை இயக்கமான கீர்த்தி (கேலோ இந்தியா ரைசிங் டேலண்ட் இனிஷியேட்டிவ்) போன்ற முன்முயற்சிகள், எதிர்கால ஒலிம்பியன்களை அடிமட்டத்திலிருந்து அடையாளம் காண்பதில் விளையாட்டு மாற்றியாக இருக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.
இந்த கலந்துரையாடலின் போது, துப்பாக்கி சுடும் வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன், உள்கட்டமைப்பு, விளையாட்டு அறிவியல், பயிற்சி உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த வசதிகளை இந்தியாவில் தற்போது பெற்று வருவதாக பாராட்டினர். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தங்கள் பயணத்தில் அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க ஆதரவையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

***************
 

MM/AG/KV


(Release ID: 2040588) Visitor Counter : 92