பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 01 AUG 2024 12:55PM by PIB Chennai

​'பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின்' கீழ், இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு (டிரைஃபெட்) மாநில அரசுகளுக்கு நிதி உதவி அளிக்கிறது. இந்த பழங்குடியின சுய உதவிக் குழுக்களின் தொகுப்புகளான வன் தன் விகாஸ் மையங்கள் மதிப்புக் கூட்டுதல் மற்றும் சிறு வனப்பொருட்கள் / சிறு வனப்பொருட்கள் அல்லாத சந்தைப்படுத்தல் மூலம் பொருளாதாரத்தை  மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை, நாடு முழுவதும் 3958 கிராம வளர்ச்சி முகமைகளை நிறுவ டிரைஃபெட் ரூ.587.36 கோடி ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை இணையமைச்சர் திரு. துர்காதாஸ் யுகே இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2040023

***********************

BR/KV


(வெளியீட்டு அடையாள எண்: 2040581) வருகையாளர் எண்ணிக்கை : 137
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Manipuri