விவசாயத்துறை அமைச்சகம்
32-வது சர்வதேச வேளாண் பொருளாதார வல்லுநர்கள் மாநாடு : பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
30 JUL 2024 6:35PM by PIB Chennai
வேளாண் பொருளாதார வல்லுநர்களின் 32-வது சர்வதேச மாநாடு புதுதில்லியில் உள்ள பூசா வளாகத்தில் 2024 ஆகஸ்ட் 2 முதல் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. புதுதில்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நித்தி ஆயோக் உறுப்பினர் பேராசிரியர் ரமேஷ் சந்த் 75 நாடுகளைச் சேர்ந்த 740 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்க இருப்பதாக கூறினார். மாநாட்டு பிரதிநிதிகளில் 45 சதவீதம் பேர் பெண்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். “நீடித்த வேளாண் - உணவு நடைமுறைகள் குறித்த மாற்றம்” என்பதே மாநாட்டின் மையக் கருத்து எனவும் அவர் தெரிவித்தார்.
மிகப் பழமையான சங்கமான வேளாண் பொருளாதார வல்லுநர்கள் சங்கத்தின் முதல் மாநாடு 1958-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற நிலையில், 66 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெறவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வருங்கால தலைமுறையினரை மனதில் கொண்டு, உணவு நடைமுறை அணுகுமுறை மற்றும் நீடித்த வளர்ச்சியில் கவனம் செலுத்தவிருப்பதாகவும் பேராசிரியர் ரமேஷ் சந்த் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039214
***
MM/KPG/DL
(रिलीज़ आईडी: 2039266)
आगंतुक पटल : 80