சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாட்டில் ஜிகா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்
Posted On:
30 JUL 2024 4:20PM by PIB Chennai
ஜிகா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. நோய் பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை இந்தத் திட்டம் வழங்குகிறது. இத்திட்டம் குறித்த தகவல்கள், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் https://main.mohfw.gov.in/?q=media/disease-alerts/national-guidelines-zika-virus-disease/action-plan-managing-zika-virus-disease: என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு நிதி ஆதரவு அளிக்கப்படுகிறது.
ஜிகா வைரஸ் உட்பட 33-க்கும் மேற்பட்ட தொற்றும் நோய்களை கண்காணித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் வகையில் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தில் ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடப்பு 2024-ம் ஆண்டு வரை 8 மாநிலங்களில் 537 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டு ஒருவர் இந்த நோய் தொற்றால் உயிரிழந்தார்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039050
******
IR/AG/KR/DL
(Release ID: 2039161)