சுற்றுலா அமைச்சகம்
மாமல்லபுரம், நீலகிரியில் பசுமை சுற்றுலா ஊக்குவிப்பு
Posted On:
29 JUL 2024 4:31PM by PIB Chennai
மாமல்லபுரம் மற்றும் நீலகிரியில் பசுமை சுற்றுலா திட்டங்கள் ஊக்குவிக்கப்படும் என மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுத்து மூலம் அளித்த ஒரு பதிலில் இதனை தெரிவித்துள்ள அவர், மாநில/யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த சுற்றுலா தலங்கள் மேம்பாட்டுக்கான நடைமுறைகளை வகுப்பதற்காக சுதேசி தர்ஷன் 2.0 என்ற திட்டத்தை மத்திய சுற்றுலா அமைச்சகம் மாற்றி அமைத்திருப்பதாக கூறியுள்ளார்.
ஐநா உலக சுற்றுலா அமைப்பின் கணக்குபடி 2024 மே மாதத்தில் ஆசிய பசிபிக் நாடுகளில் சர்வதேச சுற்றுலா பெரும் மீட்சியை அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் கொரனோ பாதிப்புக்கு முன்பு இருந்த வகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 82 சதவீதத்தை எட்டியிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இந்தியாவில் 89 சதவீதம் அளவுக்கு சுற்றுலா தொழில் மீட்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதேசி தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மாமல்லபுரம் மற்றும் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள் பசுமை சுற்றுலா தலங்களாக ஊக்குவிக்கப்படும் என்றும் அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038519
***
MM/AG/KR/DL
(Release ID: 2038673)
Visitor Counter : 80