எஃகுத்துறை அமைச்சகம்
தேசிய உலோகவியல் நிபுணர் விருதுகள் – 2024-க்கான விண்ணப்பங்களை எஃகு அமைச்சகம் வரவேற்கிறது
प्रविष्टि तिथि:
29 JUL 2024 3:11PM by PIB Chennai
மத்திய அரசின் எஃகு அமைச்சகம் உலோகவியல் துறையில் செயல்பாடுகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கழிவு மேலாண்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக தேசிய உலோகவியல் நிபுணர் விருதுகளை வழங்குகிறது. 2024க்கான இந்த விருதுகளுக்கு விண்ணப்பங்களை தொழில்துறை, ஆராய்ச்சி மற்றும் கல்வியாளர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது.
கீழ்க்கண்ட நான்கு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும்:-
- வாழ்நாள் சாதனையாளர் விருது
- தேசிய உலோகவியலாளர் விருது
- இளம் உலோகவியலாளர் விருது
a. சூழல்
b. உலோக அறிவியல்
- இரும்பு மற்றும் எஃகு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான விருது.
https://awards.steel.gov.in இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும். விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 06/09/2024 அன்று மாலை 05:00 மணி. தேசிய உலோகவியல் நிபுணர் விருதுகள் தொடர்பான தகுதி அளவுகோல்கள் மற்றும் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் https://awards.steel.gov.in என்ற இணையத்தில் கிடைக்கும்.
தொழில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அல்லது கல்வியில் தங்கள் பணி மூலம் இந்தியாவில் உலோகவியல் துறையில் பங்களித்த இந்திய குடிமக்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகிறது.
***
PKV/RR/KR/DL
(रिलीज़ आईडी: 2038620)
आगंतुक पटल : 96