நிலக்கரி அமைச்சகம்

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய நிலக்கரி இறக்குமதியைக் குறைத்து, ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை

Posted On: 29 JUL 2024 1:48PM by PIB Chennai

நிலக்கரி இறக்குமதியைக் குறைப்பதற்கும், நிலக்கரி ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும் நிலக்கரி அமைச்சகம் ஒரு உருமாற்ற முன்முயற்சியை முன்னெடுத்து வருவது, நாட்டின் எரிசக்தி நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. இந்த நடவடிக்கை உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பது, எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் நிலக்கரித் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 2023-24 ஆம் ஆண்டில் 11.65% என்ற கணிசமான அதிகரிப்பைக் கண்டது. இது தற்சார்புக்கான அரசின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது. 2024-25 ஆம் ஆண்டிற்கான இலக்கு 1,080 மில்லியன் டன் என்ற லட்சிய அளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய நிலக்கரி உற்பத்தி நாடாக இந்தியாவின் நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது.

 

நிலக்கரி இறக்குமதியைக் குறைக்கும் செயல்முறையை ஒழுங்குபடுத்த, அமைச்சகங்களுக்கு இடையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி இல்லாமல் மாற்று ஏற்பாடுகளை அடையாளம் காண பல்வேறு அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. சில உயர்தர நிலக்கரி இறக்குமதியின் தேவையை ஒப்புக் கொள்ளும் அதே வேளையில், அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் குறைப்பதிலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது.

 

இறக்குமதியைக் குறைப்பதற்கு மேலதிகமாக, புதைபடிவ எரிபொருளுக்கான வளர்ந்து வரும் உலகளாவிய தேவையைப் பயன்படுத்திக் கொள்வதற்காக அரசு நிலக்கரி ஏற்றுமதியை தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. சர்வதேச நிலக்கரி சந்தையில் இந்தியாவை ஒரு முக்கிய நாடாக நிலைநிறுத்தி, வருவாயை உருவாக்குவது மற்றும் இத்துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது இந்த முயற்சியின் நோக்கமாகும்.

 

நிலக்கரி இறக்குமதியைக் குறைத்தல் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவித்தல் ஆகியவை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியமான படிகளாகும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியை அதிகம் நம்புவதன் மூலம், நாடு வெளிநாட்டு ஆதாரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கலாம்.

 

நிலக்கரித் துறையின் மாற்றம் இந்தியப் பொருளாதாரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலக்கரியின் அதிகரித்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அரசுக்கு வருவாயை உருவாக்குவதுடன் கூடுதலாக, இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைப்பது அந்நியச் செலாவணி இருப்புக்களைப் பாதுகாக்க உதவும்.

 

ஐஐஎம் அகமதாபாத் நடத்திய ஆய்வின்படி, நேபாளம், மியான்மர், பங்களாதேஷ் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு 15 மில்லியன் டன் ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியம் இருக்கலாம்:

 

நிலக்கரி இறக்குமதியைக் குறைத்து, நிலக்கரி ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான நிலக்கரி அமைச்சகத்தின் முன்முயற்சிகள் நாட்டின் எரிசக்தி மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கின்றன. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும், இறக்குமதி மாற்றீட்டை எளிதாக்குவதன் மூலமும், ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலமும், தற்சார்பை அடைவது, எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் நிலக்கரித் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது ஆகியவற்றை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சிகள் இந்தியப் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி நிலப்பரப்பில் அதன் நிலை ஆகியவற்றில் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***

(Release ID: 2038365)
PKV/RR/KR



(Release ID: 2038525) Visitor Counter : 38