சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பசுமை இந்தியா இயக்கம்

Posted On: 29 JUL 2024 12:13PM by PIB Chennai

பருவநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டத்தின் கீழ் உள்ள, 8 இயக்கங்களில் பசுமை இந்தியாவுக்கான தேசிய இயக்கமும் ஒன்றாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பரப்புகளில் வனம் மற்றும் வனம் அல்லாத பகுதிகளில் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்தியாவின் வனப்பகுதியை பாதுகாத்தல், மீட்டெடுத்தல், மேம்படுத்துதல் மற்றும் பருவநிலை எதிர்கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதுவரை, 17 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு 1,55,130 ஹெக்டேர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மேற்கொள்ள ரூ.909.82 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலைமாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

*****

(Release ID: 2038296)

LKS/KPG/KR


(Release ID: 2038411) Visitor Counter : 72