ஊரக வளர்ச்சி அமைச்சகம்
கேரளாவிற்கு ரூ.160 கோடி முதலீட்டு மதிப்பில் 33 சாலை திட்டங்களுக்கு அனுமதி
प्रविष्टि तिथि:
26 JUL 2024 5:31PM by PIB Chennai
கேரளாவிற்கு ரூ.160 கோடி முதலீட்டு மதிப்பில் 159.86 கி.மீ. நீள 33 சாலை திட்டங்களுக்கு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. பிரதமரின் கிராம சாலைகள் திட்டம் மூன்றின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தால் கேரளாவின் ஊரக போக்குவரத்து தொடர்பு வலுப்படுத்தப்படுவதோடு, பொருளாதார வளர்ச்சியையும் வேகப்படுத்தும்.
மேலும் நகர்ப்புற மையங்களுக்கும், தொலைதூர கிராமங்களுக்கும் இடையேயான இடைவெளியை நிரப்பும் பாலமாக இது இருக்கும்.
அத்தியாவசிய சேவைகளான சுகாதாரம், கல்வி, சந்தை போன்றவற்றை எளிதாக அணுகுவதை இது மேம்படுத்தும்.
வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
***
SMB/AG/DL
(रिलीज़ आईडी: 2037710)
आगंतुक पटल : 72