தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
2024-25-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, திறன்பயிற்சி, குறு,சிறு, நடுத்தர தொழில்துறை, நடுத்தர வகுப்பினர் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தியதற்காகப் பிரதமருக்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா நன்றி தெரிவித்துள்ளார்
Posted On:
23 JUL 2024 7:26PM by PIB Chennai
தொலைநோக்குப் பார்வை கொண்டு 2024-25-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு மத்திய தொழலாளர் நலன், வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா நன்றி தெரிவித்துள்ளார். விவசாயிகள், சாதாரண மக்கள், இளையோர், மகளிர் நலனுக்கு புதிய வாய்ப்புகளை இந்த பட்ஜெட் ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.
வேலைவாய்ப்பு, திறன் பயிற்சி, குறு,சிறு மற்றும் நடுத்தர வகுப்பினரை கருத்தில் கொண்டு இந்தியாவின் சமூக பொருளாதார மாற்றத்தை நோக்கமாக கொண்டு, முன்னெடுப்புகளும், ஊக்குவிப்பு திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவில் மத்திய அரசின் நிதியுதவியுடன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 4.1 கோடி இளையோருக்கான வாய்ப்புகளை உருவாக்க அரசு உறுதி கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி, வேலைவாய்ப்பு, திறன் பயிற்சி ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதையும் டாக்டர் மன்சுக் மாண்டவியா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2036059
***
MM/IR/RS/DL
(Release ID: 2036070)
Visitor Counter : 38