நிதி அமைச்சகம்
உற்பத்தித் துறையில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 35.4 சதவீதமாக உள்ளது
Posted On:
22 JUL 2024 2:35PM by PIB Chennai
உற்பத்தித் துறையில் 35.4% பங்களிப்புடன் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாக மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 முக்கியத் தொழில் துறைகளுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கப்படுவது, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு பெரும் ஊக்கம் அளித்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாவட்டத்திற்கு ஒரு உற்பத்திப் பொருளை ஊக்குவிக்கும் விதமாக ஒற்றுமை வளாகங்களை அமைக்குமாறு மாநில அரசுகளும் ஊக்குவிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இத்துறையில் 2024 மே மாதம் வரை ரூ.1.28 லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகள் பெறப்பட்டு, உற்பத்தி / விற்பனை ரூ.10.8 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதுடன், நேரடியாகவும், மறைமுகமாகவும் 8.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், மின்னணு சாதன உற்பத்தி, மருந்துப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், தொலைத்தொடர்பு மற்றும் இணையதள சேவைக்கான பொருட்களின் உற்பத்தி கணிசமாக அதிகரித்து ரூ.4 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் திறன் மற்றும் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக ஒவ்வொரு தொழிலாளருக்குமான மொத்த மதிப்புக் கூடுதல் தொகை ரூ.1,38,207 என்பதிலிருந்து ரூ.1,41,769 ஆகவும், ஒவ்வொரு தொழிற்சாலையின் மொத்த வெளியீட்டு (உற்பத்தி) மதிப்பு ரூ.3,98,304- என்பதிலிருந்து ரூ.4,63,389 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034923
***
SMB/MM/KPG/DL
(Release ID: 2035233)
Visitor Counter : 65