உள்துறை அமைச்சகம்

2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள்/பரிந்துரைகளை அனுப்ப செப்டம்பர் 15 கடைசி நாள்

Posted On: 22 JUL 2024 11:27AM by PIB Chennai

2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள்/பரிந்துரைகளை அளிப்பதற்கான கால அவகாசம் வரும் செப்டம்பர் மாதம் 15-ந் தேதியுடன் முடிவடைகிறது. மத்திய அரசின் விருதுகளுக்கான இணையதளம் (https://awards.gov.in)  வாயிலாக மட்டுமே இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.

நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. 1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின் போது அறிவிக்கப்பட்டு வருகிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், பொதுநலன், குடிமைப்பணி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை என அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக சேவையாற்றி சாதனை புரிந்தவர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இனம், தொழில், பாலினம் போன்ற எவ்வித வேறுபாடுமின்றி சாதனை படைத்த அனைவரும் இந்த விருதைப் பெறத் தகுதியானவர்கள் ஆவர். மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க முடியாது.

பத்ம விருதுகளை மக்களுக்கான விருதுகளாக வழங்குவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. சுய விண்ணப்பம் உட்பட இந்த விருதைப் பெறத் தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

 

***

(Release ID: 2034858)

PKV/SV/RR/KR



(Release ID: 2034874) Visitor Counter : 24