பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பொது மக்கள் குறை கேட்புக் கூட்டத்தில் மத்திய இணைமைச்சர் திரு ஜிதேந்திர சிங் பங்கேற்றார்
Posted On:
20 JUL 2024 4:32PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தோடா மாவட்டத்தில் இன்று (20.07.2024) நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்ட நிகழ்ச்சியில் மத்திய பணியாளர் நலன், பொது மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் பங்கேற்றார். முன்னதாக கூட்டம் ஒன்றிலும் அவர் உரையாற்றினார்.
தீவிரவாதிகளை எதிர்த்து வலுவாகப் போராடும் நோக்கத்துடன் தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் கிராம பாதுகாப்புப் படையினர் (விடிஜி) புதுப்பிக்கப்பட்டு வருவதாக திரு ஜிதேந்திர சிங் கூறினார். பயங்கரவாதிகளால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள பல்முனை உத்தியின் ஒரு பகுதியாக, எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் விடிஜி-க்களை பணியில் ஈடுபடுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தோடாவின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து பேசிய திரு ஜிதேந்திர சிங், அரசின் கடந்த 10 ஆண்டுகளில், தொலைதூர பகுதிகளுக்கான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும், பயண நேரத்தை குறைக்கவும், பயணிகளுக்கு வசதியை மேம்படுத்தவும் நெடுஞ்சாலைகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளனா என்றார்.
முக்கியத்துவம் வாய்ந்த லகன்பூர்-பசோஹ்லி-பானி-பதேர்வா-தோடா தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நிறைடைந்த பின், 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் குறையும் என்று அவர் கூறினார், இது உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன் இப்பகுதியில் சுற்றுலாவை அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஜம்மு-காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் சமமான வளர்ச்சியை உறுதி செய்ய அரசு அயராது உழைத்து வருவதாக அமைச்சர் கூறினார். ஜம்மு காஷ்மீரில் உள்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார். பயனாளிகளின் சாதி, மதம் அல்லது மதத்தை கருத்தில் கொள்ளாமல், பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடுகளையும், சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தின் கீழ் இணைப்புகளையும் அரசு வழங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பின்னர், நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சியின் போது உள்ளூர் மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். மக்களின் கோரிக்கைகளைக் கேட்ட பிறகு, டாக்டர் ஜிதேந்திர சிங், பொது அக்கறை கொண்ட விஷயங்களை விரைவாகவும் சரியான நேரத்திலும் தீர்ப்பதை உறுதி செய்யுமாறு நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.
***
PLM/DL
(Release ID: 2034641)
Visitor Counter : 43