எரிசக்தி அமைச்சகம்
மின் பகிர்மான திட்டங்கள் குறித்த பைனான்சியல் எக்ஸ்பிரஸ் கட்டுரைக்கு (2024 ஜூலை 18) மறுப்பு
Posted On:
18 JUL 2024 5:45PM by PIB Chennai
பைனான்சியல் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் 18 ஜூலை 2024 தேதியிட்ட கட்டுரையில், “ரூ.44,000 கோடி மதிப்பிலான மின்சார திட்டங்களில் ஏற்பட்டுள்ள தாமதம், மின்சார விநியோகத்தை மேம்படுத்தும் திட்டத்தை பாதிக்கும்” என்ற தலைப்பிலான பவர் கிரிட்டுகளின் மின்பகிர்மானம் பற்றிய செய்தியில் தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக மத்திய மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆவணங்கள் அடிப்படையில் விளக்கம்
பவர் கிரிட் நிறுவனத்தால் ரூ.60,439 கோடி செலவில் செயல்படுத்தப்படும் 50 திட்டங்களில், ரூ.29,300 கோடி மதிப்பிலான 18 திட்டங்களை முடிப்பதில் 32 மாத தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டிருப்பது சரியானதல்ல. Great Indian Bustard எனப்படும் கானமயில் சரணாலயம் அமைந்துள்ள பகுதிகள் வழியாக மின்சாரம் கொண்டு செல்வது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு காரணமாக 6 திட்டங்கள் (மொத்த மதிப்பு ரூ.6500 கோடி) மட்டுமே தாமதமாகியுள்ளது.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும். ஆனால் பைனான்சியல் எக்ஸ்பிரஸ் கட்டுரையில், நடைமுறைகளை வலுப்படுத்தும் திட்டங்கள் மற்றும் ஆலோசனை கோரும் திட்டங்களையும் தவறுதலாக சேர்த்திருப்பது, தாமதப்படும் திட்டங்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டுவதாக மத்திய மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2034056
***
MM/AG/DL
(Release ID: 2034093)
Visitor Counter : 77