மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தேசிய ஆசிரியர்கள் விருது 2024-க்கு தாமாக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 2024, ஜூலை 18 வரை நீட்டிப்பு
Posted On:
16 JUL 2024 7:38PM by PIB Chennai
தேசிய ஆசிரியர்கள் விருது 2024-க்கு ஆன்லைன் வாயிலாக, தாமாக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 2024, ஜூலை 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் சுயமாக பூர்த்தி செய்த முழுமையான விண்ணப்பங்களை 2024, ஜூலை 21-க்குள் அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் 2024, ஜூன் 27 முதல் மத்திய கல்வி அமைச்சகத்தின் இணையதளமான http://nationalawardstoteachers.education.gov.in. - ல் பெறப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் என 3 கட்டத் தேர்வு வாயிலாக, 50 ஆசிரியர்கள் விருதுக்குத் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆசிரியர் தினமான 2024, செப்டம்பர் 5-ம் தேதி, புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் இந்த விருதுகளை வழங்க உள்ளார்.
மேலும் விவரங்களை இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2033735
***
MM/KPG/DL
(Release ID: 2033743)
Visitor Counter : 104