பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையத்தின் 3-வது தொகுப்பின் அமர்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது
Posted On:
15 JUL 2024 1:28PM by PIB Chennai
அமிர்த காலத்தின் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின், இந்தியா 2047 தொலைநோக்குக்கு இணங்க, சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையம், இந்திய தேசிய அறிவியல் அகாடமி ஆகியவை இணைந்து 'அறிவியல், தொழில்நுட்பத்தில் தலைமைத்துவ திட்டத்தின்' 3-வது தொகுப்பை வெற்றிகரமாக நடத்தியது. புதுதில்லியில் உள்ள இந்திய தேசிய அறிவியல் அகாடமியில் (ஐஎன்எஸ்ஏ) 2024 ஜூலை 8 முதல் 14 வரை நடைபெற்ற இந்த அமர்வில், ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, ஐஐஎஸ்இஆர், என்ஐபிஇஆர், டிஎஸ்டி, சிஎஸ்ஐஆர், போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்கள், புவி அறிவியல் அமைச்சகம், மத்தியப் பல்கலைக்கழகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இஸ்ரோ ஆகியவற்றின் 37 விஞ்ஞானிகள் பங்கேற்றனர். இவர்களில் 23 பேர் ஆண்கள், 14 பேர் பெண்கள்.
அறிவியல் நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்களில் தலைமைப் பண்புக்கும், சிறந்த நிர்வாகத்திற்கும் விஞ்ஞானிகளின் திறன்களை மேம்படுத்துவதும், தேசிய முன்னுரிமைகள், இலக்குகளை அடைவதற்கு இந்த நிறுவனங்களை திறம்பட நிர்வகிப்பதற்கான புதிய திறன்களுடன் அவர்களை தயார்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த நிகழ்ச்சியின் நிறைவு அமர்வில் உரையாற்றிய நிர்வாக சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாஸ், நாடு முழுவதும் பல்வேறு அறிவியல் நிறுவனங்களுக்கு தலைமை தாங்கும் இளைய தலைவர்களை உருவாக்குவதும், நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்வதும் இத்திட்டத்தின் நோக்கம் என்று எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2033245
****
(Release ID: 2033245)
SMB/IR/KPG/RR
(Release ID: 2033357)
Visitor Counter : 64