குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ராணுவப் பொறியியல் சேவைப் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரைச் சந்தித்தனர்

प्रविष्टि तिथि: 12 JUL 2024 1:59PM by PIB Chennai

ராணுவ பொறியாளர் சேவைப் பயிற்சி அதிகாரிகள் இன்று (ஜூலை 12, 2024) குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவைக் குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின் போது பேசிய குடியரசுத் தலைவர், இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கு மட்டுமின்றி, பாதுகாப்பு அமைச்சகத்தின் இதர பிரிவுகளுக்கும் இந்தப் பிரிவு சேவைகளை வழங்குவதாகக் கூறினார். அதனால் இப்பிரிவு நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய முக்கியமான பிரிவுகளில் ஒன்று என்று அவர் தெரிவித்தார். ராணுவப் பொறியியல் சேவைப் பிரிவின் நோக்கம் நமது பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து வலுவான உள்கட்டமைப்பைக்  கொண்டிருப்பதை உறுதி செய்வதாகும் என்று அவர் குறிப்பிட்டார். எனவே, இந்தப் பிரிவின் அதிகாரிகள் எப்போதும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.  

ராணுவப் பொறியியல் சேவை அதிகாரிகளின் பொறுப்பு தொழில்நுட்ப ரீதியானது மட்டுமல்லாமல் நெறிமுறை, நிர்வாகம் சார்ந்ததும் ஆகும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். தங்களது ஒவ்வொரு பணியிலும் நாட்டின் வளங்களை திறமையாகவும், சிறப்பாகவும் பயன்படுத்த வேண்டும் என்ற உறுதிப்பாட்டை இப்பிரிவினர் கொண்டிருக்க வேண்டும் என்று திருமதி திரௌபதி முர்மு அறிவுறுத்தினார்.

***

(Release ID: 2032680)

PLM/AG/RR


(रिलीज़ आईडी: 2032696) आगंतुक पटल : 103
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Punjabi , Gujarati , Telugu , Kannada