பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

2030-ம் ஆண்டுக்குள் ஆய்வு மற்றும் உற்பத்தி துறையில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கான முதலீட்டுக்கான வாய்ப்புகள்: பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

Posted On: 11 JUL 2024 5:38PM by PIB Chennai

030-ம் ஆண்டுக்குள் ஆய்வு மற்றும் உற்பத்தி துறை 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கான முதலீட்டுக்கான வாய்ப்புகளை வழங்குவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

உர்ஜா வார்தாவின் முதல் பதிப்பின் துவக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், எரிசக்தியில் சுயசார்பு, தொடர்ந்த பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை சாதிப்பதில் ஆய்வு மற்றும் உற்பத்தி துறையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

செயல்பாடுகளையும், ஒழுங்குமுறை நடைமுறைகளின் அவசியத்தையும் பேசிய அமைச்சர், ஆய்வு மற்றும் உற்பத்தியில் முதலீட்டினை ஊக்குவிப்பதில் அரசு பங்காற்றி வருவதாக கூறினார். நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றுவதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்  விரிவான சீர்திருத்தங்களைத் தொடங்கியிருப்பதாக கூறினார். ஆய்வு மற்றும் உற்பத்தித் துறையில் எளிய முறையில் வர்த்தகம் மேற்கொள்வதை உறுதி செய்வதற்கான அரசின் முயற்சிகள் பற்றி பேசிய அமைச்சர், நாங்கள் 37 அனுமதி நடைமுறைகளை 18- ஆக ஒருங்கிணைத்து எளிமைப்படுத்தியிருப்பதாகவும் இவற்றில் 9 நடைமுறைகள் சுயசான்றிதழ்களுக்கு தகுதி பெற்றிருப்பதாகவும் கூறினார். எனினும், இந்த சீர்திருத்தங்களை மேலும் முன்னெடுத்துச் செல்வவதற்கான அவசியத்தை அரசு அங்கீகரிப்பதாகவும் அவர் கூறினார்.

முடிவில் அமைச்சர் பூரி, எரிசக்தி துறையில் உர்ஜா வார்தா 2024 ஒத்துழைப்பு மற்றும் புத்தாக்கத்திற்கான  வினையூக்கியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு பின், அமைச்சர் பூரி, எண்ணெய்  மற்றும் எரிவாயு துறையின் தொழில்நுட்ப ஆவணங்கள் மற்றும் புத்தாக்கங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி அரங்கத்தையும், புத்தாக்க மையத்தையும் தொடங்கிவைத்தார்.

***

(Release ID: 2032477)

LKS/RS/RR



(Release ID: 2032686) Visitor Counter : 17