தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஸ்ரீஅமர்நாத் யாத்திரை மேற்கொள்வோருக்கு தொலைத்தகவல் தொடர்பு அடிப்படைக் கட்டமைப்பு விரிவாக்கப்பட்டுள்ளது
Posted On:
08 JUL 2024 12:11PM by PIB Chennai
ஸ்ரீஅமர்நாத் யாத்திரை 2024-ல் பங்கேற்றுள்ள யாத்ரீகர்களுக்கு தடையின்றி செல்பேசி இணைப்பு கிடைப்பதை உறுதி செய்ய தொலைத்தொடர்பு அடிப்படைக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைத் தொலைத் தகவல் தொடர்புத்துறை அறிவித்துள்ளது. யாத்திரைப் பாதை முழுவதும் தொடர்ச்சியாக செல்பேசி இணைப்பு கிடைப்பதற்காக, ஏர்டெல், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தொலைத் தொடர்பு சேவை வழங்கும் பெருநிறுவனங்களுடன் இணைந்து அடிப்படைக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
லக்கான்பூர் முதல் குவாசிகுண்ட் வரையும், குவாசிகுண்ட் முதல் பஹல்காம், பால்டால் வரையுமான வழித்தடங்களில் யாத்ரீகர்களுக்கும் பொதுமக்களுக்கும் 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி தொழில்நுட்பம் முழுமையாக கிடைப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டு இந்த யாத்திரை வழித்தடங்களில் 51 இடங்களில் ஏர்டெல், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ இணைப்பு வசதிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், 2024-ல் இத்தகைய இணைப்பு வசதிகள் கொண்ட இடங்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
யாத்ரீகர்களுக்கு ஏற்கனவே சிம் கார்டுகள் வழங்கப்பட்டு வந்த இடங்கள் தவிர புதிதாக சில இடங்களிலும் சிம் விநியோக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2031492
-----
SMB/KPG/KR
(Release ID: 2031496)
Visitor Counter : 79